வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்தது; பயணத்தில் மேலும் 1 கோடி பேர் இணைந்ததால் 7 நாட்களிலேயே எண்ணிக்கை இரட்டிப்பாகியது

வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்தது; பயணத்தில் மேலும் 1 கோடி பேர் இணைந்ததால் 7 நாட்களிலேயே எண்ணிக்கை இரட்டிப்பாகியது

 Chennai

பொதுமக்களின் குறிப்பிடத்தக்க ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது, இது ஒரு மாதத்திற்குள் 2 கோடி பங்கேற்பாளர்களை கடந்துள்ளது.

ஒரு கோடி பங்கேற்பாளர்கள் என்ற இலக்கை 22 நாட்களில் எட்டிய இந்தப்பயணத்திற்கு,   2-வது கோடி பங்கேற்பாளர்களை எட்டுவதற்கு 7 நாட்கள் மட்டுமே  தேவைப்பட்டது. 

இந்த யாத்திரை கிட்டத்தட்ட 60,000 கிராமப் பஞ்சாயத்துகளை சென்றடைந்துள்ளது, இது நாட்டின் ஒவ்வொரு கடைக்கோடியிலும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது. குறுகிய காலத்திற்குள், 1.6 கோடிக்கும் அதிகமான  மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு 2047 க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

குடிமக்களின் நலனை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, நாடு முழுவதும் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே பயணம்

அனைத்துப் பகுதிகளிலும் முழு மனதுடன் அரவணைக்கப்பட்ட இந்த யாத்திரை, மிகவும் தொலைதூரப் பகுதிகளைக் கூட சென்றடைந்து, அரசு சேவைகள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான ஒரு நேரடி பாதையாக செயல்படுகிறது. பங்கேற்பைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம் கிட்டத்தட்ட 80 லட்சம் பங்கேற்பாளர்களுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 29 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 23 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் மூன்றாவது இடத்திலும்  உள்ளன . ஜம்மு-காஷ்மீர் இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் ஊக்கமளிக்கும் பதிவைக் கொண்டுள்ளது.  ஆந்திரா 11 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது .

அரசுத் திட்டங்களின் 100% நிறைவு

வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணம் என்பது அரசின் முக்கிய முன்முயற்சிகளில் 100% அளவிற்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய முயற்சியாகும், அவற்றின் நன்மைகள் அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்கிறது

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image