சமாதான திட்டத்தின் மூலம் பயனடைய வணிகர்களுக்கு வேண்டுகோள்
2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரிகள் (நிலுவைகள் தீர்வு செய்தல்) தொடர்பான சமாதான திட்டத்தின் சிறப்பியல்புகளை வணிகர்களுக்கு விளக்கும் வகையில் ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில்,
அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை , பா.ஜோதிநிர்மலாசாமி ,வணிகவரித்துறை ஆணையர்,
முனைவர் டி. ஜகந்நாதன், மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் ,
சமாதானம் திட்டம் 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம் சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), சென்னை (மத்தியம்), காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மற்றும் கடலூர் கோட்டத்தை சார்ந்த வணிகர்களுக்கு வருகின்ற 06.11.2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி அளவில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. எனவே கடலூர் மாவட்ட வணிகவரி அலுவலகத்திற்கு உட்பட்ட வரி நிலுவை உள்ள சமாதான திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடைய வணிகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கடலூர் மாவட்ட வணிகவரித்துறை முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் S. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.