வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை 2,55,000 கிராமங்களை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்; ஜார்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை 2,55,000 கிராமங்களை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்; ஜார்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

 
சென்னை:
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடி மக்களின் நாயகருமான பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 அன்று, பழங்குடியினர் கௌரவ தினத்தில் இந்த யாத்திரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரை குறித்து சிறப்பு பேட்டி அளித்த திரு ராதாகிருஷ்ணன், நாட்டு மக்கள் அனைவரும் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தைப் பெறும்போதுதான்  உண்மையில் ஒரு நாடு வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் என்றும் இந்த நிலையை நாட்டு மக்கள் பெறுவதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் பயன்கள் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளை மக்களிடம் எடுத்துரைத்து பயன்பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த யாத்திரையின் நோக்கமாகும்.

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் இயக்கம் மக்கள் நலன் கருதிய மாபெரும் இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் தான் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 27 சதவீதம் வீடுகள்  இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.  அடுத்த 2 ஆண்டுகளில் 75 சதவீதம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற திரு நரேந்திர மோடி அரசின் சாதனை முயற்சியை செயல்படுத்த நாட்டின் மின்தொகுப்புகள்  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தப்பகுதியிலும் மின் தடையே இல்லை என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கும் நவீன மருத்துவ வசதி கிடைக்க குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை நிதியுதவி பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

மகளிர் நலன் கருதும் மத்திய அரசு புகையில்லா சமையலறைகளை நோக்கமாகக் கொண்டு உஜ்வாலா திட்டத்தின் கீழ்  இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி வருகிறது.  சிறு வியாபாரம் செய்வோர் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க அவர்களுக்காக பிரதமரின் ஸ்வநிதி எனும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் இந்தத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பயனைத் தருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளில் வழங்கும் திட்டம் அவர்களின் கௌரவமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

இதுபோன்ற திட்டங்கள் பல இருப்பினும் மக்கள் அவற்றை அறிந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இது நாடு முழுவதும் 2 லட்சத்து 55 ஆயிரம் கிராமங்களுக்கு  செல்லவிருக்கின்ற நாட்டிலேயே முதல் முறையான, வரலாற்றுச்சிறப்புமிக்க பயணமாகும்.  தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு  இந்த யாத்திரை செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிறைவடைந்த இந்தியாவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய மகத்தான பயணம் இதுவாகும் என்று ஜார்கண்ட் மாநில ஆளுநர்  திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image