ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.**மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார்*
*ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.*

*மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார்*

*மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ரூபாலா எடுத்துரைத்தார், இது சுமார் 8000 கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துடன் தொடர்புடையது.*

*மீனவர்களுக்கு சுமார் 1.58 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது மற்றும் நாட்டின் அனைத்து மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: திரு. ரூபாலா*




ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் உள்ள வி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவில் 2000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள், எஃப்.எஃப்.பி.ஓக்கள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வுடன் சாகர் பரிக்ரமா எனும் கடற்கரைப் பயணத்தின்  10வது கட்டம்  நிறைவடைந்தது.

சாகர் பரிக்ரமா எனும் கடற்கரைப் பயணத்தின்  10வது கட்டம் இன்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினத்தை அடைந்தது. மத்திய அமைச்சர் திரு ரூபாலா, கிருஷ்ணப்பட்டினத்தில் உள்ள ராம்நகர் மீனவ கிராமத்திற்குச் சென்று, மீனவர் திரு பிரசாத்துடன் கலந்துரையாடினார், அவர் தனது மீன்பிடி அனுபவத்தை அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில்  சாகர் பரிக்ரமாவின் 10 வது கட்டம் 13ம் தேதியன்று  தமிழ்நாட்டின் சென்னை துறைமுகத்திலிருந்து தொடங்கியது.

நெல்லூர் வி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  தொடங்கி வைத்து பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டார். தனது பயணத்தின் போது தொழில்முனைவோர், எஃப்.எஃப்.பி.ஓக்கள், மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுடன் அவர் கலந்துரையாடினார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இயற்கை மீன் பொருட்களை மத்திய அமைச்சர் பாராட்டினார்.

மத்திய அமைச்சர் திரு ரூபாலா தனது உரையில், மீன்வளத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், இந்த பயணம் சுமார் 8000 கி.மீ கடலோரப் பகுதியை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்புடையது. மீன்வளத் துறையில் ஆந்திர மாநிலத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், நாட்டின் மீன் உற்பத்தியில் சுமார் 30% ஆந்திர மாநிலத்திலிருந்து வருகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா வலியுறுத்தினார்.

அரசின் ஆதரவுடன் 100 க்கும் மேற்பட்ட செயல்பாடுகள், திட்டங்கள்  உள்ளன.  ரூ.20,050 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டது. தனித் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

சாகர் பரிக்ரமா என்பது மீனவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இதர பங்கெடுப்பாளர்களைச்  சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை மீனவர்களின் வீட்டு வாசலில் தீர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு பெரிய திட்டமாகும் என மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.

மத்திய அமைச்சர் ரூபாலா தனது உரையில், மீனவர்களுக்கு சுமார் 1.58 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கண்காட்சியில் நேரடி மற்றும் இயற்கை மீன் உற்பத்தியை காட்சிப்படுத்துவதற்காக பல்வேறு தொழில்முனைவோர், எஃப்.எஃப்.பி.ஓ-க்கள், மீன் வளர்ப்பாளர்கள் ஆகியோரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

திருமதி டி.ரேணுகா ரெட்டி மற்றும் செல்வி வி.ஜெயலட்சுமி மற்றும் பயனாளிகளுக்கு தினசரி மீன் விற்பனை இயந்திரங்களை மத்திய அமைச்சர் வழங்கினார்.

திரு. ஏ. சந்தனா, திரு ஒய். பலராம கிருஷ்ணா, செல்வி எஸ். பத்மஜா மற்றும் திரு ஈ. ரமணய்யா ஆகிய பயனாளிகளுக்கு நேரடி மீன் விற்பனை மையங்களையும் அவர் வழங்கினார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ்.

நேரடி மீன் போக்குவரத்து வாகனம், இன்சுலேட்டட் வாகனத்தையும் பயனாளிகளான திரு பி.சென்னராயுடு, திரு கே. வாசு, திரு. எம். லட்சுமி பிரசன்னா மற்றும் திரு.பி.அங்கையா ஆகிய பயனாளிகளுக்கு வழங்கினார்.

சாகர் பரிக்ரமாவின் இந்தப் பயணத்தின் போது பெறப்பட்ட அனைத்து மனுக்களும் கவனமாக பரிசீலிக்கப்படும் என்றும், மீன்வளத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும், மீனவர்கள், கடலோர சமூகங்கள் மற்றும் மீன்பிடித் துறையின் பங்கெடுப்பாளர்களின் நலனுக்காகவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது அனைத்து ஆதரவையும் தொடர்ந்து வழங்கும்  என்றும் மத்திய அமைச்சர் திரு. ரூபாலா கூறினார். மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார். மற்றும்  ஆந்திராவில் சாகர் பரிக்ரமா யாத்திரை விரைவில் திட்டமிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

திரு. எஸ். அப்பல ராஜு தனது உரையின் போது, மீன்பிடித் துறையின் முக்கியத்துவத்தையும், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றத்திற்கான அரசின் பல்வேறு திட்டங்களையும் எடுத்துரைத்தார்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையேயான  மீன்பிடி மோதல்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், இரு மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆந்திரப் பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் திரு. எஸ். அப்பலராஜூ, நாடாளுமன்ற உறுப்பினர், திரு. ஜி வி எல் நரசிம்ம ராவ், நாடாளுமன்ற உறுப்பினர், திரு. பீடா மஸ்தான் ராவ், ஆந்திர மீன்வளத் துறை ஆணையர்,   திரு. கே. கண்ண பாபு ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

மீனவர்கள், எஃப்.எஃப்.பி.ஓக்கள் மற்றும் மீன்பிடி தொழில்முனைவோர் மற்றும் மத்திய அரசின் மீன்வளத் துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

"சாகர் பரிக்ரமா" என்பது மீனவ மக்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் தொடர்புடைய பங்கெடுப்பாளர்கிடையே ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்  கடலோரப் பகுதி முழுவதும் திட்டமிடப்பட்ட மாற்றத்துக்கான ஒரு  பயணமாகும்.

***
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image