மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனோடு கயானா கூட்டு குடியரசின் வேளாண் அமைச்சர் மதிப்பிற்குரிய சுல்பிகர் முஸ்தபா சந்திப்பு
சென்னை, மார்ச் 21, 2023
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனை கயானா கூட்டு குடியரசின் வேளாண் அமைச்சர் மதிப்பிற்குரிய சுல்பிகார் முஸ்தபா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான மீன்வளத்துறை மேம்பாடு மற்றும் இறால் மீன்வளர்ப்பு போன்றவைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.