இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்
 விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை, நவம்பர் 23, 2022
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம்-1, திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.  இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திரு அமர் குஷ்வாஹா தொடங்கிவைத்தார். 
வெவ்வேறு துறைகளில் உள்ள பொருட்களின் தர நிலைகளுக்கு ஏற்ப வழங்கும் ஐஎஸ்ஐ, பிஐஎஸ் ஹால்மார்க் சான்றிதழ்களை பற்றியும், ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட பொருட்கள், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கம், வெள்ளி நகைகளின் உண்மை தன்மையை பிஐஎஸ் கேர் செயலி மூலம் எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்து நிகழ்ச்சியில் விரிவான விளக்க உரை அளிக்கப்பட்டது. 
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் -1-ன் இயக்குனர் திருமதி ஜி.பவானி, துணை இயக்குனர் பி ஜெ கவுதம், உதவி இயக்குனர் செல்வி ஆர் ஜ்யோத்ஸ்னா பிரியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  தொழில்நுட்ப விரிவுரை ஆற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
***************
SG/PKV/AG/KRS
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image