குறைவான கார்பன் உமிழ்வுடனான வளர்ச்சிக்கு இந்தியாவின் உத்தி-புபேந்தர் யாதவ்,மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்
குறைவான கார்பன் உமிழ்வுடனான வளர்ச்சிக்கு இந்தியாவின் உத்தி
-புபேந்தர் யாதவ்,
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்

அமிர்த காலத்தை நோக்கி இந்தியா முன்னேறும் வேளையில், நிலையான வளர்ச்சி பற்றிய தேசிய முயற்சிகளுக்கான குறிப்பிடத்தக்க இலக்கை விடுதலையின் நூற்றாண்டு முன்வைக்கிறது. அனைவருக்கும் அடிப்படை வசதிகளை வழங்கி, அனைவரின் முயற்சியுடன் இதனை அடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு விரிவுபடுத்த மோடி அரசு முயன்று வரும் போது, பல்வேறு சவால்களுள் பருவநிலை மாற்றமும் இந்தியாவின் பாதையில் உள்ளது.
குறைவான கார்பன் உமிழ்வுடனான வளர்ச்சியுடன் நாட்டின் மேம்பாட்டு இலக்குகளை அடைவது என்பது இந்தியாவின் பருவநிலை கொள்கையின் முக்கிய கோட்பாடாகும். வளர்ச்சி மற்றும் பருவநிலை செயல்பாடு ஆகிய இரண்டும் முன்னுக்குப் பின் முரணானது இல்லை, மாறாக அவை ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்ற வகையில் இந்தியாவின் வளர்ச்சி கருதப்படுவதாக அவ்வப்போது பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா கடுமையாக உழைக்கிறது. நீண்ட கடற்கரைப் பகுதி, வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை அதிகம் சார்ந்திருக்கும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பருவ மழை பாதிப்பு, நீர் ஆதாரங்களின் மீதான தாக்கங்கள், உள்ளிட்டவை நாட்டின் வளர்ச்சிக்கு கூடுதல் சுமையாக இருக்கும். எனினும் மிகப்பெரிய நாடு என்ற கடமையுடனும், தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் வகையிலும் புவி வெப்பமடைதல் என்ற சவாலை எதிர்கொள்வதில் வழிகாட்டியாகத் திகழ இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவின் குறைவான பசுமை குடில் எரிவாயு வெளியீட்டு மேம்பாட்டிற்கான  நீண்ட கால உத்தி, குறைவான கார்பன் உமிழ்வுடனான வளர்ச்சிப் பாதைக்கு ஏழு முக்கிய மாற்றங்களை வலியுறுத்துகிறது.
1. குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட மின் அமைப்பைின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியோடு இணைத்தல்.
2. ஒருங்கிணைந்த, பயனுள்ள, உள்ளடக்கிய குறைவான கார்பன் உமிழ்வு கொண்ட போக்குவரத்து அமைப்புமுறை.
3. நகர்ப்புற வடிவமைப்பு, கட்டிடங்களில் எரிசக்தி மற்றும் பொருள் திறன் ஆகியவற்றுடன் நிலையான நகரமயமாக்கலை பின்பற்றுதல்.
4. வெளியீடுகளிலிருந்தான வளர்ச்சியை பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் துண்டித்தல்.
5. கரியமில வாயுவை களைதல் மற்றும் இதர பொறியியல் தீர்வுகள்.
6. சமூக பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலியலைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு உகந்த வகையில் வனம் மற்றும் தாவரங்களை மேம்படுத்துதல்.
7. குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட வளர்ச்சியின் பொருளாதார மற்றும் நிதி அம்சங்கள்.
இந்தியா ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்த பூமியை காப்பாற்றுவதற்கான பொறுப்பை திறம்பட நிறைவேற்றி, பருவ நிலை செயல்பாட்டில் உறுதியோடு இருப்பதை தமது அனைத்து செயல்முறைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கைகளின் வாயிலாக பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதி செய்தார். சர்வதேச ஒத்துழைப்பிலும், க்யோட்டோ நெறிமுறைகள் மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் குறித்த பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் செயல்திட்ட மாநாட்டின் கீழ் கூட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச பருவநிலை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின் கீழ் சமத்துவம் மற்றும் பருவநிலை நீதிக்கான உறுதிப்பாட்டோடு இந்தியா செயல்படுகிறது என்பதை அதன் குறைவான உமிழ்வு கொண்ட பசுமை குடில் எரிவாயு வெளியீட்டு மேம்பாட்டிற்கான  நீண்ட கால உத்தி தெளிவுபடுத்துகிறது.


********
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image