தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ ஆயிரம் வழங்கிட வேண்டும் அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் தமிழக அரசுக்கு கோரிக்கை.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகின்றது ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படுவதில்லை.அரசு மருத்துவ மணைகளிலும் தமிழகம் முழுவதும் இதே நிலை தான் தூய்மை பணிக்கு பணி நிரந்தரமும் இல்லை பணி பாதுகாப்பும் இல்லை ஊதியமும் அரசு வழங்கும் ஊதியம் வழங்கப்படுவதில்லை.அரசு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை ஆளும் கட்சியினர் பாதி எடுத்துக் கொண்டு மீதியை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குகின்றனர்.எனவே தமிழக முதல்வர் தூய்மை பணியாளர்களின் நலனில் அக்கரை செலுத்திட வேண்டும்.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும்,அரசு மருத்துவ மணைகளிலும் தூய்மை பணியாளராக பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
* தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் தினக்கூலி ரூ ஆயிரம் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.தூய்மை பணியாளர்கள் பணியை கான்ராக்ட் விட கூடாது.
* தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்,மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
* தூய்மை பணியாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சி தலையீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் சுயமாக செயல்பட உத்திரவிட வேண்டும்.
மேற்கு கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அம்பேட்கர் இந்திய குடியரசு தூய்மை பணியாளர்கள் நலச் சங்கம்
சார்பில் நடைபெற உள்ளது.
அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் எம்ஏ,
தமிழ் மாநில தலைவர் ஏஆர்பிஐ.