இந்தியா இங்கிலாந்தை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியது: சில முக்கியத் தகவல்கள்
இந்தியா இங்கிலாந்தை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியது: சில முக்கியத் தகவல்கள்

புதிய மைல்கற்கள்

இன்று ஜி-20 நாடுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது.
இன்று இந்தியா ஸ்மார்ட்ஃபோன் நுகர்வோர் எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்று உலக சில்லறை வர்த்தகக் குறியீட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 
உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் நாடு இந்தியா.
உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது.
'புதுமைக் குறியீடு' பட்டியலில் இந்தியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, இந்தியா 670 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது. 50 லட்சம் கோடி ரூபாய் பொருட்களை ஏற்றுமதி செய்து. புதிய சாதனை படைத்தது. 
கடந்த எட்டு ஆண்டுகளில், 100 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு மாதமும் புதிய நிறுவனங்கள் சேர்க்கப்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த யூனிகார்ன்களின் மதிப்பீடு இன்று சுமார் 150 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ.12 லட்சம் கோடி.

2014க்குப் பிறகு முதல் 10,000 ஸ்டார்ட்-அப்களை அடைய நமக்கு  சுமார் 800 நாட்கள் ஆனது. கடந்த எட்டு ஆண்டுகளில், சில நூறு ஸ்டார்ட் அப்களில் இருந்து இன்று 70,000 ஆக உயர்ந்துள்ளோம். 

பல ஆண்டுகளாக இந்தியா செயல்பட்ட வேகத்திற்கு டிஜிட்டல் புரட்சி ஒரு எடுத்துக்காட்டு. 2014ல் நம் நாட்டில் 6.5 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர்.இன்று அவர்களின் எண்ணிக்கை 78 கோடியைத் தாண்டியுள்ளது.

2014ல் ஒரு ஜிபி டேட்டா சுமார் ரூ.200 ஆக இருந்தது.இன்று அதன் விலை ரூ.11-12 ஆக குறைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில், நாட்டில் 11 லட்சம் கிமீ ஆப்டிகல் ஃபைபர் இருந்தது. இப்போது நாட்டில் போடப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபரின் நீளம் 28 லட்சம் கி.மீட்டரைத் தாண்டியுள்ளது. இதில் அதிக அளவில் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் உற்பத்தியை முடுக்கிவிட, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில், இந்திய அரசு நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் அனுப்பிய தொகை ரூ.22 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

நல்லாட்சிக்காக எந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டாலும், அதை நாட்டு மக்கள் ஏற்று பாராட்டுவார்கள் என்பதற்கு  டிஜிட்டல் பரிவர்த்தனை ஒரு சான்றாகும். உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் செய்யப்படுகிறது. இன்று, தெருவோர வியாபாரிகளும், தொலைதூரக் கிராமங்களில் உள்ளவர்களும் இதன் மூலம் எளிதாக பரிவர்த்தனை செய்கிறார்கள்.


உள்ளடக்கிய வளர்ச்சி

பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் கீழ், நாட்டின் 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது.

இன்று, நாட்டின் 3 கோடி ஏழை மக்கள் தங்களுடைய உறுதியான வீடுகளைப் பெற்று, அங்கு வாழத் தொடங்கியுள்ளனர். இன்று, நாட்டின் 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இன்று, நாட்டின் 45 கோடி ஏழை மக்கள் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்தின் கீழ், நாட்டின் 35 லட்சம் சாலையோர வியாபாரிகள் நிதி உதவி பெற்றுள்ளனர்.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு தொழில் முனைவோருக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

சிறு, குறு நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்த, அரசாங்கம் கடந்த 8 ஆண்டுகளில் பட்ஜெட்டை 650 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

11 கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தத் துறையில் இணைந்துள்ளனர். இன்று அதிகபட்ச வேலைவாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.

100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்று தாக்கியபோது,  சிறு நிறுவனங்களைக் காப்பாற்றவும், அவர்களுக்கு புதிய பலத்தை வழங்கவும், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு 3.5 லட்சம் கோடியை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உறுதி செய்துள்ளது.

எளிதாக தொழில் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 

ஜிஎஸ்டி இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக  இப்போது மாதந்தோறும் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுவது வழக்கமாகிவிட்டது.   
*******

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image