தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்; ஒரு திறனின் கதைடாக்டர். எம்.எம். திரிபாதிதலைமை இயக்குனர் , NIELIT
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
;  ஒரு திறனின் கதை
டாக்டர். எம்.எம். திரிபாதி
தலைமை இயக்குனர் , NIELIT

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  தன்னாட்சி அறிவியல் நிறுவனம் ஆகும். மத்திய அரசு தகவல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பயிற்சி, கல்வி,  திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இத்துறையில் தேர்வு மற்றும் சான்றிதழுக்கான நாட்டின் முதன்மையான நிறுவனமாக தரநிலைகளை நிறுவ என்ஐஇஎல்ஐடி முயற்சித்துள்ளது. தேசிய தேர்வு அமைப்பில் இதுவும் ஒன்றாகும், இது முறைசாரா துறையில் ஐடியில் படிப்புகளை நடத்துவதற்கு அதன் தரநிலை மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளான 'ஓ' நிலை, 'ஏ' நிலை, 'பி' நிலை, சி' நிலை,' ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. மேலும் அரசு ஊழியர்களின் தகுதியை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட சிறப்பு திட்டங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பாடங்களின் தரத்தை நிலைநிறுத்துவதற்காக, என்ஐஇஎல்ஐடி தேசிய திறன்கள் தகுதிக் கட்டமைப்புடன் சீரமைத்துள்ளது. இது நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வளமான நிலத்தை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், 80 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் என்ஐஇஎல்ஐடி மூலம் அதன் பல்வேறு படிப்புகளில் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில், கார்கில், லே, மஜூலி, பாசிகாட், தேசு, சுச்சுயிம்லாங் போன்றவற்றை உள்ளடக்கிய நாட்டின் மிகவும் சவாலான பிராந்தியத்தில் அதன் மையங்களை நிறுவுவதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலை மற்றும் முடுக்கிலும் தனது எல்லையை விரிவுபடுத்த என்ஐஇஎல்ஐடி முயற்சி செய்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திறன்களை வழங்குவதற்காக, நம் நாட்டின் எட்டாத குடிமக்களை சென்றடைய வேண்டும். தற்போது,  என்ஐஇஎல்ஐடி 47 இடங்களில் அதன் நேரடி இருப்பைக் கொண்டுள்ளது, அவற்றில் 22 வடகிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. சில என்ஐஇஎல்ஐடி மையங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளன.
என்ஐஇஎல்ஐடி, ஒரு மெய்நிகர் பயிற்சி அகாடமி, பாட மேம்பாடு, நேரடி பயிற்சியை வழங்குவதற்கான மெய்நிகராக்கம், நேரடி இணைய கையகப்படுத்தும் கருவிகளின் மேம்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்த அகாடமி மூலம் ஒருவர் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் கல்வியைப் பெறலாம்.
என்ஐஇஎல்ஐடி ”பட்டியலின மற்றும் பழங்குடியின  விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி" என்ற  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்த வகுப்பைச் சேர்ந்த  இளைஞர்களுக்கு நாடு தழுவிய பயிற்சியை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின  பிரிவினரும் என்ஐஇஎல்ஐடி மையங்களில் இலவசப் பயிற்சி பெறுகின்றனர். 
என்ஐஇஎல்ஐ-யின் கம்ப்யூட்டர் கான்செப்ட் பற்றிய பாடநெறி என்பது அரசு ஊழியர்களின் டிஜிட்டல் திறமையை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய தகுதியாகும்.  அருணாச்சலப் பிரதேசம், பீகார், சண்டிகர், டாமன் & டையூ, குஜராத், ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில அரசுகள் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுக்கு இதனைப் பயன்படுத்தி வருகின்றன.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image