சாலை பாதுகாப்பு மற்றும் அவசர சேவை மேலாண்மையில் புவியியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்துதல்சந்தேஷ் நாயக், ஐஏஎஸ், கமிஷனர் IT & C & நிர்வாக இயக்குனர்-RISL, ராஜஸ்தான் அரசு
சாலை பாதுகாப்பு மற்றும் அவசர சேவை மேலாண்மையில் புவியியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்துதல்
சந்தேஷ் நாயக், ஐஏஎஸ்,  கமிஷனர் IT & C & நிர்வாக இயக்குனர்-RISL, ராஜஸ்தான் அரசு

 வளரும் நாடுகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள் போன்றவற்றால் ஏற்படும்  அவசரநிலைகள் மிக முக்கியமான காரணங்களாகும். ஒவ்வொரு விபத்தின் மீட்பு நடவடிக்கையிலும் அவசரகால  தேவை  நேரம் மற்றும் முதலுதவி ஆகியவை முக்கியமான காரணிகளாகும். மேம்படுத்தப்பட்ட அவசர கால மருத்துவம்  மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகியவை நீண்டகால காயங்களின் தீவிரத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. சாலை  விபத்துக்களில் தகுந்த முதலுதவி அளிப்பதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. முதலுதவி உபகரணங்கள் தவிர, அவசரகால சேவைகளின் இருப்பிடம் மற்றும் விபத்துகளுக்கான தூரம் ஆகியவை அவசரகால மருத்துவத்துக்கு மிகவும் முக்கிய அம்சங்களாகும்.
 ராஜஸ்தானில் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) பயன்படுத்தப்படுகிறது.  ராஜஸ்தான் அரசின் போக்குவரத்துத் துறை,  2018 ஆம் ஆண்டில் 21,743 சாலை விபத்துகளைப் பதிவு செய்துள்ளது, அதில் 10,444 பேர் இறந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் ராஜஸ்தானின் மொத்த சாலை கட்டமைப்பில்  சுமார் 3.8 சதவீதம் ஆகும், ஆனால் மொத்த சாலை விபத்துகளில் 30.9% மற்றும் மொத்த இறப்புகளில் 37.5%  நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றன.  தேசிய சாலைகளுடன் ஒப்பிடும்போது பிராந்திய சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாக உள்ளன; போக்குவரத்து சந்திப்புகள் மோதல் இடங்களாக இருப்பதால், சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 2018 காலண்டர் ஆண்டில் மொத்த விபத்துக்களில் சுமார் 24 சதவீதம் சாலை சந்திப்புகள் அல்லது கடக்கும் பாதைகளில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் 12.32% இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
 அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலைகளின் வளர்ச்சி ஆகியவற்றுடன், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்த இன்னும் மேம்பட்ட தீர்வுகள் தேவை.
சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் முடிவை எடுப்பதற்கு உதவும் அவசரகால சேவைகளைக் கண்டறிவதில் ஜிஐஎஸ் ஒரு எளிதான கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. விபத்து அவசரச் சேவைகளில் நேரம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதால், விபத்துகளின் தன்மைக்கு ஏற்ப அவசரகால சேவைகள் அமைந்தால், அது போக்குவரத்து விபத்துக்களில் அவசரகால நேரத்தைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவும்.
சாலை விபத்துகளின் காரணிகளைப் பற்றிய சிறந்த புரிதலை உறுதிசெய்ய, ஜிஐஎஸ் கருவிகள் சாலைகளின் அளவுகோல் தரவைப் பெற உதவுகின்றன. அவசரநிலை ஏற்பட்டால், ஜிஐஎஸ்-அடிப்படையிலான பயன்பாடு, அபய் கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் போன்ற கட்டளைக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் அவசரகால சேவை வாகனங்களுக்கு விழிப்பூட்டல்களை (எஸ்ஓஎஸ்) அனுப்ப முடியும், மேலும் அவசரகால சேவை வாகனத்திற்கான வேகமான வழியையும் பரிந்துரைக்கும்.
பாதை திட்டமிடலுக்கு ஜிஐஎஸ் பயன்படுத்தப்படலாம்; பாதை திட்டமிடல் என்பது போக்குவரத்தில் இன்றியமையாத பயன்பாடாகும். பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். எந்த வழியைப் பின்பற்றுவது சிறந்தது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அனைவருக்கும் சாதகமாக உள்ளது. இது நேரத்தை மிச்சப்படுத்தவும், அடிப்படையில் சிறந்த செலவு/பயன் விகிதத்தைப் பெறவும் உதவும்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சக்திவாய்ந்த முடிவெடுக்கும் கருவியாக ஜிஐஎஸ் உதவும். ஜிஐஎஸ் அடிப்படையிலான பயன்பாடுகளிலிருந்து தொகுக்கப்பட்ட தரவு நுண்ணறிவு உயிர்களைக் காப்பாற்ற விரைவான மற்றும் பயனுள்ள முடிவெடுக்க உதவும். தரவு மற்றும் நுண்ணறிவுகள் வழிசெலுத்தல் சேவை வழங்குநர்களுக்கு அவர்களின் சேவையை மேம்படுத்துவதற்கும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பில் அரசாங்கத்திற்கும் பெரிதும் பயன்படும்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image