தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தூத்துக்குடிக்கு நல்ல பலன்கள் நிச்சயம்- வழக்கறிஞர்கள் பேட்டி.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தூத்துக்குடிக்கு நல்ல பலன்கள் நிச்சயம்- வழக்கறிஞர்கள் பேட்டி.

தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதையில் செல்வதை தடுக்க ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தங்கள் கருத்துகளை சட்டபூர்வமாக கையாளுங்கள் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் சிலர் கூறியுள்ளனர்.
தூத்துக்குடியிலுள்ள வழக்கறிஞர்கள் மணிகண்ட ராஜா,நாகராஜா, கருப்பசாமி, ஜி. மணிகண்டன், கர்ணன், அஜிமா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது அவர்கள் கூறுகையில்.. இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயம் ஸ்டெர்லைட் அதற்காக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு ஆய்வு அறிக்கை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பலர் கருத்து தெரிவித்தாலும் ஒரு வழக்கறிஞர்களாக நாங்கள் என்ன சொல்கிறோம், என்றால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆய்வறிக்கை மக்கள் மத்தியில் பல விஷயங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தும் ஒரு அடித்தட்டு மக்களுக்கு கூட இதன் விபரம் சேரும் என நாங்கள் நம்புகிறோம்.
நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணையின் போது கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள், குற்றம்சாட்டப்பட்ட மக்கள், ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் தனித்தனியாக விசாரணை செய்துள்ளது.
ஒரு நபர் ஆணையத்தின் முழு அறிக்கை வெளியாகாத நிலையில் ஒரு சில பக்கங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த கலவரத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை அப்பட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.  இந்த கலவரமானது ஏற்பட்ட காரணம் என்ன, யார் மூலமாக இது ஏற்பட்டது, யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், எதனால் இந்த கூட்டம் சேர்க்கப்பட்டது. 144 தடை உத்தரவு போடப்பட்ட பின்பும் எப்படி இவ்வாறு கூட்டம் சேர்ந்தது, கலவரம் ஏற்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த விசாரணையில் பொதுமக்களை தவறான பாதையில் வழி நடத்தி இருந்தார்கள் என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு சட்டத்துக்கு உட்பட்டு கண்டிப்பான தண்டனை அளிக்க வேண்டும். 
எங்கள் ஊரைச் சார்ந்த எங்களது சகோதரர்கள் சகோதரிகள் 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.  13 பேர் உயிரிழப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. எனவே இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு புறம்பாக செயல்படுதல், சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களை தூண்டுதல், ஆர்ப்பாட்டம் பண்ணுதல் போன்ற எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய அவர்...

கலவரத்திற்கும் ஸ்டெர்லைட்க்கும் சம்பந்தமில்லை என்பதை தெரியவந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுபவர்களை எதிர்ப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். இது தவறானது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தங்களுடைய கருத்தை சட்டப்படியான விஷயங்களை நியாயமான வழியில் வெளிப்படுத்த வேண்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் ஆதரவாக செயல்படும் பெண்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்று கூறினார்.  

ஸ்டெர்லைட் ஆலையால் நன்மை என்பதால் தான் ஆலையை அமைக்க  ஒரு கட்சி அடிக்கல் நாட்டியது, இன்னொரு கட்சி இந்த ஆலை திறக்க ஒப்புதல் கொடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்ற அவர்..
ஸ்டெர்லைட் ஒரு தனியார் தொழிற்சாலை அது வேண்டுமா வேண்டாமா என்பது தமிழக அரசு நீதித்துறை சார்ந்த விஷயம். தூத்துக்குடி நகரம் வளர்ச்சி அடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் அவர்கள் தேவையற்ற குற்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை திறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image