இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன- வினி மகாஜன், செயலாளர்மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை
இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன
- வினி மகாஜன், செயலாளர்
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை
முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் நமது நாடு சிகரத்தைத் தொட்டிருப்பதுடன், கிராமப்புற இந்தியாவை மாற்றியமைப்பதற்கான  பெரும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது.   நாம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதுடன், அனைத்தும் சரியாக நடைபெறுவதால்,  இந்தியாவில் உள்ள 1,01,462 கிராமங்கள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக,  தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறத்தின் தகவல் சாதன மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.   
இத்தகைய கிராமங்கள் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன்,  அந்தந்த கிராமங்களை தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமானதாக வைத்திருக்கும் நோக்கில், துப்புரவுப் பயணத்தையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.   
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் அவருக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக, திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நாட்டை உருவாக்கும் நோக்கில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, எட்டாண்டுகளுக்கு முன் தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கிவைத்தார்.   அவரது தொலைநோக்குப் பார்வை காரணமாக, உலகின் மிகப்பெரிய பழக்கவழக்க மாற்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிய நம் நாடு, 2 அக்டோபர் 2019-லேயே, ஐ.நா.சபையால் நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்-6 நிர்ணயித்த காலக்கெடுவிற்கு 11 ஆண்டுகள் முன்பாகவே, அந்த இலக்கையும் எட்டி சாதனை படைத்து, இந்தியாவின் கிராமப்புறங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன.  எனினும், இத்துடன் இந்த இயக்கத்தின் நோக்கம் முடிந்துவிடவில்லை.   மாறாக, நாடு முழுவதும், முழுமையான தூய்மைப் பகுதியாக மாறுவதை உறுதி செய்வதற்கு அடித்தளமிட்டிருக்கிறது. 
தூய்மை இந்தியா இயக்கம்- கிராமப்புறத்தின் இரண்டாம் கட்டத்திற்காக, மத்திய அரசு, பிப்ரவரி 2020-ல் ரூ.1,40,881கோடி நிதி ஒதுக்கியது.   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒருங்கிணைத்ததன் வாயிலாக, 15-வது நிதிக்குழு மூலமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.   
மாநில, மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி(பஞ்சாயத்து) அளவில் இத்திட்டத்தை விரைவாகவும், திறம்படவும் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, விரிவான கவனம் செலுத்தப்பட்டது.   இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப நடைமுறைகள் மற்றும் சாதன விவரங்கள், அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அவற்றின் நிர்வாகிகளின் திறமை மேம்படுத்தப்பட்டது.   அத்துடன், ஊராட்சித் தலைவர்கள், கிராம அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டது.   
அத்துடன், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறத்தின் 2-ம் கட்டம்,  இந்தியாவின் கிராமப்புற சமுதாயம் மற்றும் தனிநபர்களின் திறமையை அதிகரிக்கும் நோக்கில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.   மக்கள், தூய்மையான, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுடன், அனைத்து கிராமங்களும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை முறைகளை ஏற்படுத்துவதும் ஊக்குவிக்கப்பட்டது.    
இந்த முயற்சிகளின் காரணமாக, அடுத்த மூன்று ஆண்டுகளில்,  இந்த நாட்டின் சிறப்புவாய்ந்த மக்கள்,  தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க கரம்கோர்த்து செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.   
                                                

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image