2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள் இந்திய டிஜிட்டல் புரட்சியின் மையமாக மாறவிருக்கின்றன திரு அர்விந்த் குமார், தலைமை இயக்குனர், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள்
2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள் இந்திய டிஜிட்டல் புரட்சியின் மையமாக மாறவிருக்கின்றன 
திரு அர்விந்த் குமார், 
தலைமை இயக்குனர், 
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள்  

புதிய இந்தியா மேலெழுந்து வருவதை உலகம் காண்கிறது. மாபெரும் விருப்பங்கள், வியத்தகு திறமைகள், தளராத உறுதி, நாட்டில் மிகப்பெரிய பணிபுரியும் ஆற்றல் கொண்ட மக்கள் ஆகியவற்றால் இந்தியா முன்னோக்கிச் செல்கிறது.  இளைஞர் சக்திக்கு அப்பால், இந்தியாவின் வளர்ச்சிக் கதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி இருக்கின்ற இணையதள பயன்பாட்டாலும் எழுதப்பட்டுள்ளது. இது கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் டிஜிட்டல் புரட்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. தங்களின் வாழ்விடம், கல்வி, வயது, வேறுபாடின்றி நாட்டின் மக்கள் அனைவரும் டிஜிட்டல் பரவலின் பயன்களை அனுபவித்து வருகின்றனர்.  இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் இதன் பயனை கூடுதலாக அனுபவிக்க உள்ளன. இதற்கான அடிப்படை கட்டமைப்பு இந்த நகரங்களில் அதிகப்படுத்தப்பட உள்ளன. வளர்ச்சியை மேலும் அதிகரிக்க தேவைப்படும் அனைத்து வசதிகளையும் இந்த நகரங்கள் பெறவிருக்கின்றன. 
ஐஏஎம்ஏஐ – கன்டார் ஐசியூபிஇ 2020 அறிக்கை மதிப்பீட்டின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45% அதிகரிக்கும். 2020-ல் 622 மில்லியனாக இருந்த பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 2025 வாக்கில் 900 மில்லியனாக அதிகரிக்கும்.  மக்கள் தொகையில் பெரும் பகுதியை கொண்டுள்ள 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள் அவற்றின் அன்றாட தேவைகளுக்கு அதிவேகமாக டிஜிட்டல் உலகத்துடன் இணைகின்றன.  இதனால், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி உறுதித்தன்மை உள்ளதாக மாறுகிறது. 2025 வாக்கில் இந்தியாவின் நகர்ப்புறங்களைவிட, கூடுதலாக இணைய பயன்பாட்டாளர்களை கொண்டவையாக ஊரக இந்தியா இருக்கும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
உலகளாவிய மிக்கின்சே நிறுவன (எம்ஜிஐ) மதிப்பீட்டின்படி, உலகில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 17 நாடுகளில் இந்தியா வெகுவாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடாக உள்ளது என இந்நிறுவனத்தின் டிஜிட்டல் ஏற்புக் குறியீடு கூறியுள்ளது. ‘தொழில்நுட்ப சேவைகளின் எதிர்காலம் – இந்த 10 ஆண்டின் வெற்றி’ என்று பெயரிடப்பட்டுள்ள நாஸ்காம் அறிக்கை, நிதி, வங்கி, பொருளாதாரம், ஐடி / ஐடிஇ ஆகியவற்றில் அதிகரித்து வரும் இந்தியாவின் டிஜிட்டல் கனவு போன்ற 50-க்கும் அதிகமான டிஜிட்டல் முன்முயற்சிகள் இந்த 10 ஆண்டு வெற்றியின் முக்கிய அம்சங்களாகும் என்று கூறுகிறது.  இது பொருளாதாரத்தில் 8% பங்களிப்பைத் தரும்.  மேலும், கொவிட்-19 பெருந்தொற்றும்கூட டிஜிட்டல்மயத்தை விரைவுபடுத்தியுள்ளது.  நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவான சக்தியாக 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள் உள்ளன. 
டிஜிட்டல் மய முன்முயற்சிகளுக்கு ஏற்ப, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.  ‘இல்லத்திலிருந்து வேலை’ என்ற நடைமுறை பணியாளர்கள் புலம்பெயர்தல் என்பதை மாற்றியுள்ளது. இதன் காரணமாக வேலை தேடுவோர் வேலைவாய்ப்புக்காக முதல்நிலை நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்வதற்கு பதிலாக பல நிறுவனங்கள்  இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் திறமையானவர்களை தேடிக் கண்டறியும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.  மேலும், நிலம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவு குறைவு, பெருமளவு திறன்தொகுப்பு கிடைத்தல் உட்பட பன்முக ஆதாயத்திற்காக முதன்மையான பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நகரங்களில் விரிவாக்கும் திட்டத்தில் ஈடுபடுகின்றன.  இந்தக் காரணங்களால் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள் டிஜிட்டல் புரட்சியில் முன்னணி இடங்களாக வளர்ந்து வருகின்றன. 

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image