கால்நடைத்துறைக்கு நிதியுதவி அளிக்க கடன் வழங்குதலை அதிகரித்தல்
கால்நடைத்துறைக்கு நிதியுதவி அளிக்க கடன் வழங்குதலை அதிகரித்தல் 

2019-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த பணிக்குழு கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணைத் துறையில் விவசாயிகளைவிட பாரம்பரிய விவசாயிகள் கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளது. 75 சதவீத கால்நடை வளர்ப்பு விவசாயிகள் இரண்டு முதல் நான்கு கால்நடைகளைக் கொண்ட நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் வங்கியில் கடனுதவி பெறுவது பெரும் சவாலாக உள்ளது.   கால்நடை வளர்ப்பு, வன வளர்ப்பு, மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள், வேளாண் உற்பத்தியில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வந்த போதிலும், மொத்த வேளாண் கடனில் பத்து சதவீதத்தை மட்டுமே பெற்று வருகின்றனர் என ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.  பதிவு செய்யப்பட்ட நில ஆவணங்கள்  வைத்திருக்கும் விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கு கடன் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.  இந்த நிலைக்குத் தீர்வு காண அரசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணைத்  துறையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடன் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
41 சதவீத சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்மட்டுமே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.  இவர்களைத்தவிர பெரும்பாலானோர் அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி சிரமப்படுபவர்கள் ஆவர். இந்த நிலையைப் போக்க 2019ஆம் ஆண்டின் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.   இந்தத் திட்டத்தின்  மூலம் 2 சதவீத வட்டி மானியம் முறையாக திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 3 சதவீத ஊக்கத்தொகை ஆகியவை, ரூ. 3 லட்சம் வரையிலான  குறுகிய காலக்கடனுக்கு வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் 70 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால் கிராமப்புற மகளிர் அதிகாரமளித்தலில் உழவர் கடன் அட்டைகள் முக்கிய பங்காற்றுகின்றன. 
கால்நடை வளர்ப்புத் தொழில் சந்தித்து வரும் முக்கிய சவால்களில்  தரமான தீவனம் கிடைக்காததும் ஒன்றாகும்.  இதனால் உற்பத்தித் திறன் குறைவாகக் காணப்படுகிறது. எனவே, இந்த வகையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்ட பல்வேறு முன்முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி போன்ற கால்நடைகளை வளர்க்க 50 சதவீத முதலீட்டு மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
.இந்த விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை ஊக்குவிக்க  பல்வேறு அறிவிப்புகள் 2021 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.   அரசு எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் கிராமப்புற பகுதிகளில் செழிப்பை உருவாக்கும் வகையில்,பன்மடங்கு பயனை அளிக்கக் கூடியதாகும்.
திரு அதுல் சதுர்வேதி, செயலாளர், மத்திய கால்நடை
வளர்ப்பு மற்றும் பால்பண்ணைத் துறை

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image