தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக இந்தியா அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக இந்தியா அறிவித்துள்ளது   .                 .   
புதுதில்லி, ஜூலை 26, 2022
தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை  உட்பட 5 இடங்களை, ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புதிய இடங்களாக  இந்தியா அறிவித்துள்ளது. மிசோரமில்  பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியவை மற்ற இரண்டு புதிய இடங்களாகும். இத்துடன் ராம்சர் இடங்களின் எண்ணிக்கை 49-லிருந்து  54-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும் என குறிப்பிட்டுள்ளார். 
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த  ராம்சர் அங்கீகாரம் பெற்ற   மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image