இந்தியாவின் படிக்கிணறுகள் – ஜல் மந்திர் (நீர் கோவில்) திட்டம்

இந்தியாவின் படிக்கிணறுகள் – ஜல் மந்திர் (நீர் கோவில்) திட்டம்

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. தண்ணீரை சேமித்து வைப்பதற்கு நமது முன்னோர்கள் படிக்கிணறுகளை பயன்படுத்தினர். படிக்கிணறு என்பது படிக்கட்டு வடிவக் கிணறுகள் அல்லது குளங்கள் ஆகும். 
இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல வகையான சேமிப்பு மற்றும் நீர்ப்பாசன தொட்டிகளுக்கு படிகிணறுகள் எடுத்துக்காட்டுகளாகும். இந்தியா முழுவது பல்வேறு பெயர்களால் படிக்கிணறுகள் அழைக்கப்படுகிறது. 
 
வறட்சியின் போது தண்ணீரை உறுதி செய்வதற்கான தேவையிலிருந்து படிக்கிணறு தோன்றியதாகக் கருதலாம். படிக்கட்டுக் கிணறுகள் நீர் சேமிப்புக்கு மட்டுமல்லாமல் மத விழாக்கள் மற்றும் சடங்குகளுக்கான தளங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படிக்கிணறுகள் உள்ளன. ஆனால் அவற்றில் பலவை அளவுக்கு அதிகாமான தண்ணீர் இறைத்தல் காரணமாக வறண்டுவிட்டன. சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் இருக்கும்போது அது பாசி அல்லது தாவரத்தல் மூடப்பட்டுவிட்டது. மற்றவை பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன.

2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டெல்லியில் உள்ள அதிகாரிகள் ஐந்து இடைக்கால கிணறுகளை தூர்வாரி மற்றும் மறுசீரமைப்புக்கு அனுமதியளித்தனர். மேலும், சில இந்திய பொறியாளர்கள் இந்த பழங்கால கட்டமைப்புகளால் ஈர்க்கப்பட்டு நீர் சேகரிப்புக்காக புதிய தொட்டிகளை வடிவமைத்ததாகவும் கூறப்படுகிறது.
 

படிக்கிணறுகளின் கட்டமைப்புத் தனித்துவம் மற்றும் நீர் பாதுகாப்பில் அவற்றின் பங்கைக் கருத்தில் கொண்டு, குஜராத் அரசு 2007-08 முதல் 2011-12 வரை, "ஜல்-மந்திர்" (நீர் கோயில்) என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் மூலம் இந்த படிக்கிணறுகளை புதுப்பிக்கவும், சுத்தப்படுத்தவும், புத்துயிர் அளிக்கவும் முடிவு செய்தது. 

அக்டோபர் 2021 இல் ஜல் ஜீவன் திட்டம் தொடர்பாக கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுடன் உரையாடிய போது பிரதமர் நரேந்திர மோடி ஜல் மந்திர் திட்டம் குறித்து பேசினார். 27 மார்ச் 2022 அன்று ஒலிபரப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சியின் 87வது பதிப்பில், படிக்கிணறுகளைப் பாதுகாப்பதில் 'ஜல் மந்திர் திட்டம்' ஆற்றிய முக்கியப் பங்கு குறித்து பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். உள்ளூர் அளவில் இதுபோன்ற திட்டங்களை  மேற்கொள்ளுமாறு குடிமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
 

இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட படிக்கிணறுகள், துறைமுகங்கள், குளங்கள், தொட்டிகள் அல்லது ஏரிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிட்ட தேசியக் கொள்கையையும் இந்திய அரசு ஆலோசித்து  வருகிறது

நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக இருக்கும் மற்றும் உறுதியான நீர் விநியோக திட்டங்கள் இல்லாத பகுதிகளில் ஜல்-மந்திர் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image