மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: மதுரை. ஜூன்.23-மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 8-வது சர்வதேச யோகா தினம் "மனிதநேயத்திற்காக யோகா" என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உட்பட அனைவரையும் நல்நெறிப்படுத்தும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பள்ளி,கல்லூரிகளில் யோகாவை அனைவரும் கற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதனடிப்படையில்,மதுரை நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட யோகா தினத்தில்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, யோகா அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.மேலும்,தினந்தோறும்யோகா பயிற்சி செய்யும் பொழுது நல்ல சிந்தனைகள் ஏற்படும் என்று மாணவ,மாணவியர்களுக்கு கூறினார்.மதுரை நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்து,யோகா பற்றிய சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் யோகாசனம் செய்து காட்டினர்.இணை இயக்குனர் காளிதாஸ் (மகளிர் திட்டம்) மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.