ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்: இந்தியாவின் சுகாதார கவனிப்பில் மாற்றங்களை செய்பவை டாக்டர் ஆர் எஸ் ஷர்மா, தலைமை செயல் அதிகாரி, தேசிய சுகாதார ஆணையம்

 ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்: இந்தியாவின் சுகாதார கவனிப்பில் மாற்றங்களை செய்பவை

டாக்டர் ஆர் எஸ் ஷர்மா, 

தலைமை செயல் அதிகாரி, 

தேசிய சுகாதார ஆணையம் 



2017 ஆம் ஆண்டில் தேசிய சுகாதாரக் கொள்கை அனைவருக்கும் சுகாதாரம் என்ற சாதனையை நோக்கமாக கொண்டது.  சுகாதார கவனிப்புக்கான செலவுகளை கணிசமான அளவு குறைப்பது இதன் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.  

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்பது சுகாதார காப்பீட்டு தேசத்தின் முதலாவது முயற்சியாக இருக்க வேண்டும்.  தேசிய ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டம் போன்ற இதற்கு முந்தைய திட்டங்களுக்கும், ஆந்திரப்பிரதேசத்தின் ஆரோக்கியஸ்ரீ, மகாராஷ்டிராவின் ஜீவன்தாயி திட்டம் போன்ற மாநில அரசின்  திட்டங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  இருப்பினும், முதன்முறையாக பெரும்பாலும் நாடுமுழுவதும் அமலாக்கப்படுகின்ற சுகாதார காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

மாநில சுகாதாரத் திட்டங்களுடன் சேர்ந்து ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் 2022 ஏப்ரல் 1 நிலவரப்படி, 14 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை (70 கோடி தனிநபர்கள்) உள்ளடக்கியிருக்கிறது.  ஏறத்தாழ 18 கோடி தனிநபர்கள் இந்த திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  ஏறத்தாழ 3.28 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இந்த திட்டத்தின்மூலம் ரூ.37,600 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  அண்மைக் காலங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாபெரும் பெருந்தொற்றுக்கு இடையே இந்த சாதனை மூன்றரை ஆண்டுகளிலேயே எட்டப்பட்டது. 

மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு பார்வை, மத்திய அமைச்சரவையின் மையப்படுத்தப்பட்ட கொள்கை கட்டமைப்பு ஆகியவை இந்த திட்டத்தின் வெற்றியை அதிகரிக்கச் செய்துள்ளது.  

புற்றுநோய், நரம்பியல் சார்ந்த அறுவை சிகிச்சை, இதயம் சார்ந்த அறுவை சிகிச்சை போன்ற  மருத்துவ ரீதியான தனித்துன்மையுள்ள பல்வேறு சிகிச்சைகளுக்கு  பயனாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழான பயன்கள், மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளன.  மேலும், தொலைதூர கிராமங்களில் உள்ள பயனாளிகளும் மிகவும் நவீனத்துவம் உள்ள மருத்துவ வசதிகளை பெறுவதற்கான சிறப்பு அம்சத்தை இத்திட்டம் கொண்டுள்ளது.

தற்போது ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மாநிலத்திற்கே உரிய 25-க்கும் அதிகமான சுகாதார திட்டங்களுடன் இணைத்து அமலாக்கப்படுகிறது.  மேலும், இதன் பயன் பயனாளியின் வீட்டிற்கே சென்று கிடைக்கச் செய்யும் நிர்வாக ரீதியான நடைமுறையை உறுதி செய்ய நாடுமுழுவதும் 600-க்கும் அதிகமான மாவட்டங்களில் மாவட்ட அமலாக்கப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், குடும்ப உறுப்பினர்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை ஐந்தாக நிர்ணயித்து இருந்தது.  இது வீட்டில் உள்ள பெண் உறுப்பினர்களை குறிப்பாக, பெண் குழந்தைகளை விலக்குவதற்கு  வழி வகுத்தது.  ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் இந்த உச்சவரம்பை நீக்கியுள்ளது.  ஆயுஷ்மான் அட்டை பெற்றிருப்போரில்  சுமார் 50 சதவீதம் பெண்களாக உள்ளனர்.  

இந்த திட்டம் தடையின்றி அமலாவதை உறுதிசெய்ய  அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை பெறுவதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  தேசிய சுகாதார ஆணையத்தில் நான் பொறுப்பேற்கும் போது, வீட்டுக்கு வீடு ஆயுஷ்மான் என்ற முக்கிய செயல்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தேன்.   இதன்படி முன்கள சுகாதாரப் பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், கிராமப்புற டிஜிட்டல் தொழில் முனைவோர் பயன்படுத்தப்பட்டு வீட்டுக்கு வீடு ஆயுஷ்மான் பயனாளிகளை திரட்டுவது செயல்படுத்தப்பட்டது.  தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்காக இரவு நேர சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்காரணமாக, தேசிய சுகாதார ஆணைய ஐ டி நடைமுறையால் உருவாக்கப்பட்ட ஆயுஷ்மான் அட்டைகளை விட, 55 சதவீதம் அதிகரித்து 2021 ஜனவரிக்குப் பின் 4.7 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  

அமலாக்க ஆதரவு முகமைகளான பிரதமரின் ஆரோக்கிய மித்ராக்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள், ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்குவோர் மற்றும் கூட்டாளிகளாக செயல்படும் சிஎஸ்இ போன்ற முகமைகளின் அயராத பணியால்  இந்த திட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.  இருப்பினும், இதன் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு  உதவியாக மேலும் பலவற்றை மேற்கொள்ளும் தேவைகள் உள்ளன. 


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image