ஊரக தூய்மை இந்திய திட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் முக்கியமானதாக உள்ளது
கட்டுரையாளர் – திருமிகு. வினி மகாஜன், செயலாளர், ஜல்சக்தி அமைச்சகம்
‘‘பெண்களின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாதவரை, உலக நலனுக்கு வாய்ப்பில்லை.’’ - சுவாமி விவேகானந்தா.
கடந்த 2014ம் ஆண்டு, மத்திய அரசால் தொடங்கப்பட்ட, ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய இலக்கு நாட்டை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாற்றுவது, சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பிரச்னை களுக்கு தீர்வு கண்டு தூய்மையை கொண்டு வருவது ஆகும். இது ஊரக மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்.
இத்திட்டம் குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்தை மேம்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரத்தை பெண்கள் முன்னின்று நடத்தி, தங்கள் குடும்பங்களுக்கு கழிப்பறை கோரி துணிச்சலுடன் போராடினர். வீட்டு குப்பைகளை சேகரித்து, அவற்றை பிரித்து தொழில் முனைவு நடவடிக்கைகளிலும் இறங்கினர். இதில் சுயஉதவிக் குழு பெண்களின் பங்கு முக்கியமானது.
2022 மார்ச் 8ம் தேதி கொண்டாப்படும் சர்வதேச பெண்கள் தினத்தின் கருப் பொருள், ‘‘நிலையான எதிர்காலத்துக்கு, தற்போது பாலின சமத்துவம் தேவை’’ என்பதுதான். இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஊரக தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காற்றும் பெண்களை வணங்குகிறேன். பெண்களின் முன்னேற்றம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் அளிக்கும்.
ஊரக தூய்மை இந்தியா திட்டத்தில், மாதவிலக்கு சுகாதார மேலாண்மை:
ஊரக தூய்மை இந்தியா திட்டத்தில், மாதவிலக்கு சுகாதார மேலாண்மை முக்கியமானது. இது இயற்கையான நடைமுறை என்றாலும், உலக மக்களில் பாதி பேரை. இது 12 வயது முதல் 49 வயது வரை பாதிக்கிறது. இது தொடர்ந்து தர்மசங்கடமானதாகவும், வெட்கப்படக் கூடியதாகவும், மாதவிலக்கு அசுத்தம் என்ற களங்கத்தையும் ஏற்படுத்தி, பாலின சமத்துவத்துக்கு தடையை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில், பருவ வயதில் முறையற்ற சுகாதார காரணங்களால், பல பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை கைவிடுகின்றனர். மேலும், குடும்பங்களில் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளால், பெண்கள் தங்கள் இயல்பான பணிகளில் ஈடுபட தடை ஏற்படுகிறது.
இதுபோன்ற சவால்களை சந்திக்கும் பெண்கள், மாதவிலக்கு சுகாதார மேலாண்மையை அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது சுகாதார நடவடிக்கை மட்டும் அல்ல. பெண்களின் கவுரவத்தை பாதுகாத்து, அவர்கள் தங்கள் கனவுகளை அடையவும், பாலின சமத்துவ உலகை அடையதற்கான வாய்ப்புகளை அளிப்பதில் இது முக்கியமான நடவடிக்கை ஆகும்.
குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மாதவிலக்கு சுகாதார மேலாண்மை வழிகாட்டுதல்கள், பதின்வயது பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் உதவியாக உள்ளன. இது மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் தொழில்நுட்ப நிபுணர்கள், பள்ளி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. ஊரக தூய்மை இந்தியா திட்டம், வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மாதவிலக்கு சுகாதாரத்தில் இதுவும் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இது பாதுகாப்பான மாதவிலக்கு சுகாதார நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. பள்ளிகள் மற்றும் பொது கழிவறைகளில் சுகாதார நேப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் நேப்கின்களை அழிக்கும் இயந்திரங்களை பொருத்துவதை இது வலியுறுத்துகிறது.
பெண்களை முன்னேற்றுவது மற்றும் அவர்களுக்கு சமவாய்ப்புகளை வழங்கி, அவர்கள் தங்கள் முழு திறனை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் நான் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்