கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து எழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம்
அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை
அறக்கட்டளை மற்றும் புதுச்சேரியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்
நடைபெற்றது,
இதனை பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்கள்
கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்,
இதில் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் மகளிர் மருதுவம்
குழந்தைகள் மருத்துவம் எலும்பு மூட்டு மருத்துவம் தோல் பல் மருத்துவம்
காது மூக்கு தொண்டை மருத்துவம் இருதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் உள்ள
நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்பட்டு இலவசமாக மருந்து
மாத்திரைகள் வழங்கப்பட்டன..
முகாமில் முத்துகிருஷ்ணாபுரம் எழுமேடு ஊராட்சி பகுதியை சேர்ந்த
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்,
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார் TUJ மாநில ஒருங்கிணைப்பாளர்
ரமேஷ்குமார் , நிர்வாகக் குழு தலைவர் ரவிச்சந்திர ரெட்டியார், முன்னாள் தலைவர் சதாசிவம், துணை மருத்துவ கண்காணிப்பாளர் சுவாதி ஜெந்த்பவார் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர், தான்யா முருகன், பொது மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் கௌதம் பொது மருத்துவ சிறப்பு நிபுணர் திவ்யா தலைமையாசிரியர் ஹேமசுதா, மருத்துவ சேவை அறக்கட்டளை நிறுவனர் சிவகுரு, கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி, விவசாயிகள் நண்பர்கள் அளவு உறுப்பினர் ஆத்மா குழு கண்ணன். நிர்வாக குழு உறுப்பினர் வீரப்பன், மற்றும் மருத்துவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,