திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சுமித்ரா வெங்கடேசன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பு : பொதுமக்கள் வெற்றி திலகமிட்டு அமோக வரவேற்பு :
திருவள்ளூர் பிப்.18 : திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி 3- வது வார்டில் போட்டியிடும் வி.சுமித்ரா வெங்கடேசன் பல இடங்களில் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லியும், தற்போதைய திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி துண்டுப்பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.அப்பொழுது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, வெற்றி திலகமிட்டு அமோக வரவேற்பு அளித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது மின்னல் மகேஷ்,பிரபாகரன்,எஸ்.சங்கர்,எம்.எஸ்.சீனிவாசன்,கே.குமார்,ஏ.தாமோதரன்,வி.பார்வதி,டி.சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.