வட்டார மொழி புதுமைகள் திட்டத்தின் அடித்தளங்கள் சிந்தன் வைஷ்ணவ், பிவி மதுசூதன் ராவ்

 வட்டார மொழி புதுமைகள் திட்டத்தின் அடித்தளங்கள்

சிந்தன் வைஷ்ணவ், பிவி மதுசூதன் ராவ்

புதுதில்லி, டிசம்பர் 31, 2021

இன்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளதைப் போலவே இந்தியாவிலும் முன்னணி கண்டுபிடிப்பு சூழலியலில் முழுமையாக பங்கேற்க ஒரு புதுமையாளருக்கு ஆங்கிலத்தில் புலமை தேவை. 

வட்டார மொழி பேசும் ஆங்கிலம் தெரியாத புதுமையாளர் ஒருவர், எவ்வளவு ஆக்கப்பூர்வமான தீர்வை உருவாக்கி இருந்தாலும், ஆங்கிலம் பேசுபவரைப் போல் எளிதாக முதலீடுகளை திரட்ட சிரமப்படுவார். ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு என்பது மொழி சார்ந்ததா? நிச்சயமாக இல்லை! நமது படைப்பாற்றல் மிக்க கலைஞர்களில் சிலர் ஆங்கிலம் அறியாதவர்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆக்கபூர்வமான வெளிப்பாடு மற்றும் தகவல் தொடர்புக்கான மொழியை வேறுபடுத்தும் வட்டார மொழி புதுமைகள் திட்டத்தை (விஐபி) உருவாக்குவதற்கான நேரம் இது. நிதி ஆயோக்கில் செயல்படும் இந்திய அரசின் முதன்மைத் திட்டமான அடல் இன்னோவேஷன் மிஷன் அத்தகைய இயக்கத்தைத் தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளது. 

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 10.4% இந்தியர்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். பத்து வருடங்கள் கழித்து இந்த எண்கள் பெரிதும் மாறியிருக்க வாய்ப்பில்லை. நம் மக்கள்தொகையில் 90% மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார மொழி புதுமையாளர்களுக்கு நாம் ஏன் சமமான வாய்ப்பை உருவாக்கக்கூடாது. இந்த பிரிவினர் எந்த இந்திய மொழியைப் பேசினாலும், மற்றவர்களைப் போலவே படைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். 

வட்டார மொழிப் புதுமைத் திட்டத்தை உருவாக்குவது என்றால் என்ன? ஒரு மட்டத்தில், ஒரு புதுமை சூழலை உருவாக்குவதை இது குறிக்கிறது. வட்டார மொழி கண்டுபிடிப்பாளர் ஒருவர் (அ) வடிவமைப்பு சிந்தனை மற்றும் தொழில்முனைவின் நவீன படிப்புகளை கற்க முடியும், (ஆ) உலகளாவிய சந்தைகளை அணுக முடியும் மற்றும் (இ) முதலீடுகளை ஈர்க்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளுக்கு இத்தகைய சூழலியல் அமைப்புகளை உருவாக்குவதே நோக்கமாகும். 


வட்டார மொழி புதுமைத் திட்டத்திற்கு இரண்டு கூடுதல் பரிமாணங்கள் தேவை: மொழி மற்றும் கலாச்சாரம். இத்திட்டத்திற்கு தேவையான திறனை உருவாக்க, அடல் இன்னோவேஷன் மிஷன், இந்தியாவின் 22 அட்டவணையிடப்பட்ட மொழிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு மொழி பணிக்குழுவைக் கண்டறிந்து பயிற்சியளிக்க தில்லி ஐஐடி வடிவமைப்புத் துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

ஒவ்வொரு பணிக்குழுவும் வட்டார மொழி ஆசிரியர்கள், வடிவமைப்பு சிந்தனை வல்லுநர்கள், தொழில்நுட்ப எழுத்தாளர்கள் மற்றும் பிராந்திய அடல் இன்குபேஷன் மையங்களின் தலைவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. மேலும், வடிவமைப்பு சிந்தனை நிபுணத்துவத்தை வழங்க தொழில்துறை வழிகாட்டிகள் கைகோர்த்துள்ளனர். இது தவிர, பெருநிறுவன சமுக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தை சேர்ந்தவர்களும் தாராளமாக இயக்கத்தில் சேர ஒப்புக்கொண்டனர். டிசம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலப்பகுதியில் பணிக்குழுவிற்கு பயிற்சி அளித்த பிறகு, வட்டார மொழி கண்டுபிடிப்பாளர்களுக்கு இந்த சூழலியல் திறக்கப்படும். இத்தகைய முயற்சியைத் தொடங்கும் உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கக்கூடும். 

கட்டுரை ஆசிரியர்களைப் பற்றி: 

டாக்டர். சிந்தன் வைஷ்ணவ் அடல் இன்னோவேஷன் மிஷனின் மிஷன் இயக்குநராக உள்ளார்

 பேராசிரியர். பி.வி. மதுசூதன் ராவ், இயந்திர பொறியியல் பேராசிரியர் மற்றும் வடிவமைப்புத் துறைத் தலைவர், இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image