பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த
நண்பர் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பண்ருட்டி
காவல் துணைக் கண்காணிப்பாளர் பேச்சு,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அற்ற தமிழகம் உருவாக்குவோம் என்ற
நிகழ்ச்சி பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது ,
இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வள்ளி
வரவேற்று பேசினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுள்ள
கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்
அப்போது பேசுகையில். பெண் பிள்ளைகள் கல்வி உயர்வு நாட்டின் வளர்ச்சிக்கு
பெரிதும் முக்கியம் வாய்ந்ததாகும்,
மாணவர்களுக்கு சிறந்த நண்பர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மட்டும்
தான் ஆகையால் உங்களுக்கு ஏற்படக்கூடிய எவ்வித பிரச்சினைகள் இருந்தாலும்
உடனடியாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்
மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படிப்பதினால் நம்முடைய இலக்கை
எளிதாக அடைய முடியும் என்றும் கூறினார்
மேலும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்து
உங்களுக்கு ஏற்படக்கூடிய எவ்வித பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என்றும்
கூறினார்,
இதில் உதவி ஆய்வாளர் சுடர்மதி மற்றும் தலைமையாசிரியர் ஆசிரியர்கள்
மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்,,