தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில்கருப்பு மாஸ்க் அணிந்து ஆர்ப்பாட்டம்.

 தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசின் மதவெறி செயல்களை கண்டித்து

கருப்பு மாஸ்க் அணிந்து ஆர்ப்பாட்டம்.





 லட்சத்தீவு மக்களின் உரிமைகளைப் பறிக்கும் உத்தரவுகளை திரும்பப் பெறவும்  மத்திய அரசின் நிர்வாகி பாஜகவை சேர்ந்த பிரபுல் கோட்டா பட்டேலை  திரும்பப் பெற வலியுறுத்தியும்.



காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ,சட்டபிரிவு 370 உள்ளிட்டு பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் மீண்டும் வழங்கிடவும் 


சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை  வாபஸ் பெறவும் 


நாடு முழுவதும்   சிறுபான்மை மக்களை-வழிபாட்டுத்தலங்களை தாக்கி வருவதை கண்டித்தும்


ஆதிவாசி மக்களின் உரிமைப் போராளி அருட்தந்தை  ஸ்டேன் சாமி அவர்கள் விசாரணை கைதியாக மரணமடைவதற்கு காரணமான மோடி அரசை கண்டித்தும் -இரங்கல் தெரிவித்தும்,


கடலூர் மாவட்ட  சிறுபான்மை மக்கள் நலக்குழு  சார்பில்  பண்ருட்டியில் 6.7.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இதில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் உதயகுமார்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன்,அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஸ்டார் சவுக்கத் அலி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சங்கரன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ் கே ஏழுமலை,மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் ஜீவானந்தம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் ராஜேந்திரன்,சிபிஎம் நகர செயலாளர் உத்தராபதி  ,ஆட்டோ சங்கத்தலைவர் நிசார் அகமது, வாலிபர் சங்க நகர செயலாளர் சங்கர்,தொலைத்தொடர்பு மு.நிர்வாகி ஜெயராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image