நோய்களே வராமல் தடுக்க திரிபலாசூரணம் அனைவரும் சாப்பிடலாம்
நோய் தாக்கிய பிறகு மருந்து எடுத்துக் கொள்வதும் சிகிச்சை பெறுவதும் இயல்பானது
ஆனால் நோயே வராமல் கட்டுக்குள் வைக்கும் உணவு முறையைத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்
மருத்துவமுறையில் பழமையான பாரம்பரிய மருந்துகளில் குறிப்பிடப்பட்ட பொருள்களை முன்னோர்கள் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டார்கள்
காரணம் இவையெல்லாம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்தன
அப்படி நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட சகல நோய் நிவாரணியாக கருதி எடுத்துக்கொண்ட பொருள் திரிபலா சூரணம்
திரிபலா சூரணத்தை காயகல்பம் என்றும் நித்திய ரசாயனம் என்றும் நம் முன்னோர்கள் அழைத்தார்கள்
திரிபலா சூரணம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் அருமருந்தாகும்
திரிபலா ஒரு பாரம்பரிய மருந்து
நெல்லிக்காய் கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் ஆகும் திரிபலா பொடி யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது
தற்போதைய கொரோனா நோயின் காலகட்டத்தில் வரும் மூச்சுக்குழாய் அடைப்பு ,சீரற்ற சுவாச நிலை கோளாறுகள், சைனஸ் தொந்தரவுகள், சுவாசப்பாதையில் அடைப்பு தரும் சளி தொந்தரவுகள், ஆகியவற்றை நிரந்தரமாக போக்கும் சிறந்த மருந்து திரிபலா
திரிபலா சூரணத்தை மழை காலங்களில் வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்
குளிர்காலங்களில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்
பனிக்காலங்களில் தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
கோடைகாலங்களில் நீருடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
கொரோனா காலகட்டத்தில் வரும் உடல் பலவீனம், சோர்வு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற மருத்துவரின் ஆலோசனை கேட்டு திரிபலா சூரணத்தை முறையாக எடுத்துக்கொள்ளலாம்
செங்கை பாம்பன் பழனி
பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்தாளுநர்