ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி
அய்யா மனுநீதி மாணிக்கம்
அவர்களுக்கு மக்களின் நன்றிகள்!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த
சேம கோட்டையில் செயல்பட்டு வரும் மனுநீதி இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதனால் இப்பகுதி மக்கள் உணவு வழங்கிய ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துவிட்டு கின்றனர்.
கடந்த 25/5/21 முதல் 1/6/21 வரை எட்டு நாட்கள் கீழ்க்கண்ட கிராமங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தட்டாஞ்சாவடி, திருவதிகை ,
அங்கு செட்டிபாளையம் ,
பெரிய ஏரிப்பாளையம், சின்னஏரிபாளையம்,
ராயர் பாளையம், அருங்குணம் மற்றும் சேமக்கோட்டை,
இருளர் குடியிருப்பு, மற்றும் ரோட்டோர பகுதியில் உள்ள வயதானவர்கள் உட்பட மதிய உணவு வழங்கப்பட்டது.
அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் உத்தரவின் பேரில் அந்த அமைப்பின் மேலாளர் இராதாகிருஷ்ணன் தலைமையில் சேமக்கோட்டையை சேர்ந்த வேலூ, ஆறுமுகம், பூபாலன், ஏழூமலை உள்ளிட்ட தன்னார்வலர்கள் மூலம் எட்டு நாளாக 4000 ஏழைகளுக்கு உணவு வழங்கபட்டது.
சேமக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் தொடர்ந்து உணவு கிடைக்காத நிலையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் தினக் கூலிகள் வேலையின்றி சிரமப்படுகிறார்கள் மேலும் உழைக்க முடியாதவர்கள் உணவுக்கு கஷ்டப்படுகிறார்கள் சிரமப்படுகிறார்கள்
என்பதை கண்டறிந்து. பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை பகுதியில் உள்ள ஐயா அவர்களின் மனுநீதி இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்கு அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 8 நாளாக உணவு வழங்கப்பட்டது.
ரோட்டோரம் தரைகடைகாரர்கள், அன்றாட யாசகம் பெற்று வாழ்பவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள்,வயதான ஏழைகள் போன்றவர்களுக்கு உணவு வழங்கபட்டது.
எந்த சூழ்நிலையிலும் உணவின்றி யாரும் பசியுடன் வாழக் கூடாது .
உணவில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதுதான் அய்யாவின் கொள்கை. இதை நிறை வேற்றுவதற்காக தான் உழவர்கள் உயர்வடைய வேண்டும் உற்பத்தி இரட்டிப்பாக வேண்டும் அதன் மூலம் நாட்டில் உணவு பஞ்சம் தீர வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு வரும்
அய்யா வாழும் மனுநீதிச் சோழன், உழவர்களின் உரிமைக் குரல், ஏழைகளின் தலைவன், குரலற்றவர்களின் குரல், சுற்றுச்சூழல் சூறாவளி, என்ரெல்லாம் மக்களால் போற்றப்படும் அய்யா அவர்கள்,
அந்த அமைப்பின் நிர்வாகிகள்
இதனை திட்டமிட்டு 25.5.2021 முதல் 01.06.2021 தேதி வரை எட்டு நாட்களாக 4 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்து செயல்படுத்தப்பட்டது.
உணவைப் பெற்றுக் கொண்ட மக்கள் ஐயாவிற்கு மனதார நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.