ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மனுநீதி அறக்கட்டளை மூலம் இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
குரானா இரண்டாம் கட்ட பாதிப்பு பரவலை தடுக்கும் விதமாக 16/4/21 அன்று புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கருதி
முககவசம் வழங்கபட்டது.
சாலை ஓர கடைகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள், ரோட்டரி கிளப், சுகாதார துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை , ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊடக துறை நண்பர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு இலவச முககவசம் வழங்கபட்டது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் மனுநீதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் முககவசங்கள் வழங்க பட்டது.