மனுநீதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கம்
அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் விளக்கம்
உழவர்களை ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் லாபம் பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்து அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு விவசாயிகளை வாழ வைக்க வேண்டும்
என்ற நீண்ட கால நோக்கத்திற்காக பல்வேறு செயல்பாடுகளை மனுநீதி அறக்கட்டளை செய்து வருகிறது இதில் ஒன்றுதான்
மனுநீதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
இதன் நோக்கம் கூட்டு கொள்முதல் ,கூட்டு கற்பனை , நேரடி விற்பனை, விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர் அடையும் லாபம் உழவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதாகும்.
இதில் உறுப்பினராக நிபந்தனைகள்
1. நிலம் சார்ந்த உற்பத்தியில் நேரடியாக ஈடுபட கூடியவராக இருக்க வேண்டும்
2. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் எதுவாக இருந்தாலும் நேரடியாக உற்பத்தியில் ஈடுபட வேண்டும்
3. இதில் உறுப்பினராகும் நபர் பங்குத் தொகை செலுத்த வேண்டும்
4. ஒவ்வொரு 20 நபர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அடிப்படையில் குழுவாக இணைய வேண்டும்.
5. ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் வீதம் தனது பங்குத் தொகையை செலுத்தி உறுப்பினராக வேண்டும்
6. ஒவ்வொரு 20 நபரும் தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் அவர்களின் பங்குத் தொகை அந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
7. 20 நபர்கள் கொண்ட குழு மனுநீதி உற்பத்தியாளர் குழு என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்படும்
8. 20 நபர்கள் கொண்ட குழு 50 தொடங்க வேண்டும் மொத்த உறுப்பினர்கள் ஆயிரம் விவசாயிகள் வரை இனையலாம்.
9. ஆயிரம் நபர்கள் தலா ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் பங்குத் தொகையாக இருக்க வேண்டும்.
10. ஒவ்வொரு விவசாயிகளும் தனது நிலத்தில் ஒரு பகுதியை இயற்கை விவசாய ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும் குறிப்பாக ஒரு விவசாயி ஒரு ஏக்கர் வீதம் ஆயிரம் ஏக்கரில் முதலாம் ஆண்டு இயற்கை வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
11. இயற்கை விவசாய நடைமுறை தொழில்நுட்பங்களை மனுநீதி உழவர்படை மூலம் செயல்படுத்தும். இதற்கான இடு பொருட்கள் அனைத்தும் மனு நீதி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும்.
12. ஒரு 20 நபர் கொண்ட குழுவில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் வீதம் தேர்வு செய்து 100 நபர்கள் கொண்ட செயல்பாட்டு குழு அமைக்கப்படும்
13. இந்த 100 நபர்களில் இருந்து ஐந்து நபர் கொண்ட தலைமைக் குழு அமைக்கடும்
14. ஒவ்வொரு நபரிடமிருந்து நில ஆவணம் மொத்த நிலம் சாகுபடி செய்யும் பயிர் நீர் ஆதாரம் பயன்படுத்தும் உரங்கள் புகைப்படம் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் மனுநீதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து இனைந்து கொள்ளலாம்
15. இதில் உறுப்பினராகும் நபர் வேறு எந்த உற்பத்தியாளர் நிறுவனத்திலும் இணையாமல் இருப்பது சிறந்தது.
16. தொழில்நுட்ப குழு, ஆலோசனைக் குழு, விற்பனை குழு, கொள்முதல் குழு, தரக் கட்டுப்பாட்டு குழு, அரசு நலத்திட்டங்கள் மற்றும் கடன் தொடர்பான குழு, சட்ட ஆலோசனை குழு போன்றவைகள் அமைக்கப்படும். இதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதும் மண்வளத்தை கூட்டுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதும் உழவர்கள் மத்தியில் எளிதான ஒன்றாக இதனால் உழவர்களின் உரிமைகள் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்