மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்க : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாலை நடந்த பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து போற்றும் இறை தூதர் நபிகள் நாயகத்தையும் அவர்களது குடும்பத்தினரையும் மிக தரக்குறைவாக ஆபாசமாக பேசியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றது .
தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதின் விளைவாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கல்யாண ராமனை காவல்துறை கைது செய்துள்ளது என்கின்ற செய்தி வெளியாகி உள்ளன.
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை தரக்குறைவாக சமூக வளைதளங்ளிலும் மேடைகள் தோறும் தொடர்ந்து பேசி வருவம் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் நாவை தமிழக பாஜக தலைமை அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தோடு மாமன் மச்சான்களாக சகோதரர்களாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் , இந்துக்களின் ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கல்யாண ராமண் போன்றவர்கள் விளம்பரம் தேடுவதற்காகவும் கலவரத்தை நடத்தும் நோக்கில் , நபிகள் நாயகத்தை பற்றி அவதுறாக பேசி வருகிறார்கள்.
எனவே : தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்க : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாலை நடந்த பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து போற்றும் இறை தூதர் நபிகள் நாயகத்தையும் அவர்களது குடும்பத்தினரையும் மிக தரக்குறைவாக ஆபாசமாக பேசியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றது .
தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதின் விளைவாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கல்யாண ராமனை காவல்துறை கைது செய்துள்ளது என்கின்ற செய்தி வெளியாகி உள்ளன.
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை தரக்குறைவாக சமூக வளைதளங்ளிலும் மேடைகள் தோறும் தொடர்ந்து பேசி வருவம் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் நாவை தமிழக பாஜக தலைமை அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தோடு மாமன் மச்சான்களாக சகோதரர்களாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் , இந்துக்களின் ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கல்யாண ராமண் போன்றவர்கள் விளம்பரம் தேடுவதற்காகவும் கலவரத்தை நடத்தும் நோக்கில் , நபிகள் நாயகத்தை பற்றி அவதுறாக பேசி வருகிறார்கள்.
எனவே : தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.