உற்பத்தித் திறனும் ( farm productivity)பண்ணை கொள்முதல் விலையும் (farmgate price) விவசாயிகளின் பொருளாதார தன்னிறைவுக்கு (self reliant economic) சாத்தியம் அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் ஆய்வு

உற்பத்தித் திறனும் ( farm productivity)பண்ணை கொள்முதல் விலையும் (farmgate price)  விவசாயிகளின் பொருளாதார தன்னிறைவுக்கு (self reliant economic) சாத்தியம்

அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் ஆய்வு





 திரும்பும் திசையெல்லாம் திகைக்க வைக்கும் செய்திகள், உலகிற்கே உணவளிக்கும் உழவர்களின் போராட்டம், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் மட்டுமே பார்க்க முடிகிறது அனைவருக்கும் உணவளிக்கும் உழவர்களின் அவல நிலைக்கு யார் காரணம் அவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி கவலைப்படுபவர்களோ, ஆய்வு செய்தவர்களோ, அவர்களிடம் குறை கேட்பவர்களளோ அவர்களின் பிரச்சினைகளில் பங்களிப்பு செயதவர்களோ  இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.


 இந்த உலகத்தில் ஒன்று போட்டால்  ஆயிரம் மடங்காக உற்பத்தியாகும்  தொழில் விவசாயம் மட்டுமே என்பதை யாராலும் மறுக்க முடியாது ஒரு விதையை மண்ணில் விதைதால் அந்த விதையில் இருந்து ஆயிரக்கணக்கான விதைகள் உருவாகிறது அப்படி என்றால் பல மடங்கு உற்பத்தி பெருக்கம் என்பது தான் பொருள் இவ்வளவு அதிக  வருமானம் தரக்கூடிய லாபகரமான தொழிலில் எப்படி நஷ்டம் வருகிறது??  பலருக்கு இது தெரியவில்லை.

இதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் கருத்து சேகரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உழவர்களின் உரிமை குரல் ! வாழும் மனுநீதிச் சோழன்!

விவசாயத்தின் விடிவெள்ளி!

 அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் கூறும் தீர்வுகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்


 மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும், கட்டுக்கடங்காத ரசாயன உரங்களின் விலை ஏற்றமும், இடைத்தரகர்களின் ஒப்பந்த நெருக்கடியும், உலக வர்த்தக சந்தைகளின் விலை கொள்கையும் உழவர்களின் உயிரை பறிக்கும் நிகழ்வுக்கு காரணமாக  இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வருமையிலிருந்து உழவர்கள் விடுபடவேண்டும்

அவர்களின் வாழ்வு  உயரவேண்டும்  என்று எத்தனையோ தலைவர்கள் நம் நாட்டில் முழக்கமிட்டு வருகின்றார்கள் பலஆண்டுகள்  முழக்கமிட்டும்   உழவர்களின் உற்பத்திப் பொருளுக்கு கட்டுப்படியான விலை என்பது இன்றுவரை குதிரைக்கொம்பு தான்!?


 விவசாயிகளைப் பார்த்து "சிந்தியுங்கள் சிறந்த தீர்வு உண்டு"

 "ஒன்றுபடுங்கள் உறுதியான உயர்வு நிச்சயம்" உரிமைக் குரலை உயர்த்தி வருகிறார் ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்கள்.


சரியான பருவத்தில், சரியான பயிரை தேர்வு செய்து, சரியான தொழில் நுட்பத்தை, சரியான நபர்கள் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தினால் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் சாத்தியம் என்கிறார்

 அய்யாவின் கொள்கை ஒரு ஏக்கரில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம்  ஒரு லட்சம் லாபம் பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்து அரசனுக்கே உணவளிப்பவன் என்று பெருமிதத்தோடு வாழ வைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image