நல்லாட்சியில் இயற்கை வேளாண்மை தான் நிரந்தரம் அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் அனுபவம்
நம்முடைய முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வேளாண்மை தொழில்நுட்பத்தை பயிர் வாரியாகவும், பகுதி வாரியாகவும், மண் வாரியாகவும் திட்டமிட்டு செய்து வெற்றி கண்ட அனுபவங்கள் ஏராளமாக உள்ளன.
பசுமை புரட்சி திட்டத்திற்கு பிறகு வேளாண்மையில் இயற்கைக்கு முரண்பாடாக வேதி உப்புகளை பயன்படுத்தி வேளாண்மை வெற்றிகொள்ள முடியும் என்ற தவறான கொள்கையால் அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் சாதனை என்று சில உற்பத்தி முடிவுகளை வைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன ஆனால் அதன் விளைவு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழித்துவிட்டது, மண்ணின் வளம் கெட்டு விட்டது ,தொடர்ந்து வேதி உப்புகளை பயன்படுத்தியதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களை இழந்ததோம் ரசாயன உரத்தினால் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்த பூச்சி மேலாண்மை என்பது பசுமை புரட்சி வேளாண்மை பிறகு ரசாயன பயன்பாட்டால் தீமை செய்யும் பூச்சிகளுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தியது இவற்றை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரில் அதிக நச்சுத்தன்மை கொண்ட விஷங்களை உணவு பயிர்கள் மீது தெரியவேண்டிய நிர்பந்தத்திற்கு உழவர்கள் தள்ளப்பட்டார்கள் இதனால் உண்ணும் உணவில் விஷம் கலந்து விட்டது இவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பரிமாணங்களில் மாற்றமடைந்து தாய்ப்பாலில் விஷம் என்ற அளவிற்கு அதனுடைய நச்சு த் தன்மை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டில் விவசாயிகளின் பாதிப்பிற்கும் , மகசூல் குறைவிற்கும், பொருளாதார நஷ்டம் ஏற்படுவதற்கும் என்ன காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு இன்றைக்கு பயன்பாட்டிலுள்ள
வேதி வேளாண்மையே காரணம் என்ற உன்னையை புரிந்து கொண்டோம்.
பயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான மூன்று சத்துக்களான தழைசத்து ,மணிசத்து, சாம்பல் சத்து இம்மூன்றுக்கும் இயற்கையில் மாற்று இல்லையா? என்ற பெரும் கேள்வி எங்களுக்கு எழுந்தது
அதனடிப்படையில் காட்டாமணக்கு என்ற தாவரம் ஏரி குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு தேவையற்ற கழிவாக கருதப்படும் இந்த தாவரத்தை வெளியேற்றுவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே இந்த காட்டாமணக்கு பற்றிய ஆய்வின் முடிவில் அதிக அளவில் பொட்டாஷ் அதாவது சாம்பல்சத்து இருப்பது ஆராய்ச்சி பூர்வமாக டெஸ்ட் செய்யப்பட்டது. இந்த சத்து தான் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் காய்கறிகள் ,பழங்கள், தானியங்களில் பூச்சி நோய் தாக்காமல் பளபளப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான சத்தாகும் இது இயற்கையில் பெருமளவில் கிடைக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். தற்பொழுது இதை ஒரு டன் 1200 ரூபாய்க்கு சுற்றுவட்டார பகுதி மக்களிடையே நாங்கள் கொள்முதல் செய்கின்றோம். அடுத்தபடியாக எருக்கஞ்செடி இது பயன்பாடற்ற நிலங்களில் பெருமளவு வளர்ந்து கிடக்கிறது இதில் அதிக அளவில் போரான் சத்து உள்ளது மேலும் ஆவாரை வேம்பு போன்ற தாவர கழிவுகளிலிருந்து தழை ,மணி ,சாம்பல் சத்துக்கள் கிடைக்கும் வகையில் அடி உரம் தயார் செய்ய கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளோம்.
இது அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பரிந்துரை செய்து வருகிறோம்.
அனைத்து வகை சாகுபடி பயிர்களும் வளர்வதற்காக எங்களிடம் வளர்ச்சி ஊக்கி (growth boster)GB தயாரித்து வருகிறோம் இது தாவர வளர்ச்சிப் பருவத்தில் நெல் கரும்பு வாழை காய்கறிகள் பருத்தி பழ மரங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பயிர்களுக்கும் தெளிப்பு முறையில் பயன்படுத்த பரிந்துரை செய்து வருகிறோம்.
மகசூல் பெருகி (yield and Rashi boster) YRB இந்த திரவ மருந்து அனைத்து பயிர்களுக்கும் பூக்கும் பருவத்தில் பயன்படுத்தவேண்டும் (தெளிக்கவேண்டும்) இதன் பயன் சத்துக்களை முறைப்படுத்தவும் பூக்களை அதிகப்படுத்தவும் மகசூலை உறுதிப்படுத்தவும் நோய் எதிர்ப்பை உருவாக்கவும் பயன்படுகிறது.
மூலிகை பூச்சி விரட்டி(Muligai poochi viratti ) MPV.இந்த கரைசல் ஐந்துக்கு மேற்பட்ட மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது அனைத்து பயிர்களுக்கும் அனைத்துப் பருவத்திலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரும்பொழுது பூச்சிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும் இயற்கை இடுபொருள் தயாரிப்பு அனுபவம் மற்றும் பயன்பாட்டு அனுபவம் எங்களுக்கு மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உரத்தொழிற்சாலை பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும். இந்த தொழிற்சாலைகள் உருவாக்க பட்டால் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் உறுதிப்படுத்தலாம்.
இந்திய அரசு ரசாயன உரத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் கோடி ரூபாய் உர மானியத்திற்கு வழங்கிவருகிறது அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டால் அரசு உரத்திற்காக ஒதுக்கப்படும் 200000 கோடி ரூபாயை இயற்கை இடுபொருள் உற்பத்திக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உழவர் மத்தியில் ஒலிக்கத் தொடங்கும் அரசும் அதற்கு தலை சாய்க்கும் என்ற தன்னம்பிக்கையோடு இயற்கை வேளாண்மையில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறேன்.