நமது நல்லாட்சியில் குருகுல கல்வி முறை கட்டாயமாக்கப்படும்!!
ஐயா மனுநீதி மாணிக்கம் உறுதி!!
பிறக்கும்போதே இறப்பு நிச்சயிக்கப்பட்டு விட்டது !
இறப்பு சிறப்பாக அமைய
நிகழ்காலத்தில் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.!!
இது அய்யா மாணிக்கம் அவர்களின் தத்துவச் சிந்தனை.
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம். தாழ்ந்தாலும் உயர்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் இந்த பாடல் வரிகள் கூறுவதுபோல் தமிழர்களாகிய நாம் தமிழனாக பிறந்ததற்கு பெருமை பட வேண்டும் ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமைகள் ஏராளமாக உள்ளன நம்முடைய பாரதபிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு உடைய பெருமைகளை பல்வேறு நிலைகளில் மேற்கோள்காட்டி பேசி வருகிறார் .
திருக்குறள் கூறும் முக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அறம், பொருள், இன்பம் உனர்த்தும் நெறிமுறைகள்
உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் ஆட்சி முறை மற்றும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் முறை போன்றவைகள்
உலகிற்கே ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடிய செய்தியை நம்முடைய தமிழ் சமூகம் அறிமுகப்படுத்துகிறது என்பது பெருமைக்குரியது.நாட்டில் நல்லவர்களை உருவாக்க ,
நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதற்கு காரணம்
நாம் கற்கும் ஏட்டுக்கல்வி முறையும் ஒன்றாகும்.
கல்வி கற்பது குருவை வணங்கி குருவின் அரவணைப்பில் அவருடன் இணைந்து வாழ்க்கை கல்வியை அனுபவத்தோடு கற்று நடைமுறை படுத்தி வருவதுதான் குருகுல கல்வி முறை ஆகும்.
இந்தக் கல்வி முறையில் ஆசிரியர்களை இந்த சமூகம் குருவாக அங்கீகரிக்கும் குருவானவர் சமூக அந்தஸ்து பெரும்பொழுது நல்ல கருத்துகளையும் நல்லொழுக்க நெறிமுறைகளையும் தனது சிஷ்யர்கள் ஆகிய மாணவர்களுக்கு கற்றுத் தருவார்கள் அந்த கற்றலானதுஉணர்வுபூர்வமாகவும் சமூக அந்தஸ்தை உயர்த்த கூடியதாகவும் அமையும் இதுவே குருகுல கல்வி முறையின் சிறப்பு ஆகும்குருகுல கல்விமுறையில் எவற்றையெல்லாம் கற்க முடியும் என்பதை நமக்கு பட்டியலிடுகிறார் ஐயா மாணிக்கம் அவர்கள் குருகுலக் கல்வி என்பது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது மண்ணின் பெருமையும், மன்னர்களின் நல்லாட்சி முறையையும், வாழ்ந்து காட்டிய சித்தர்களின் வாழ்வியலையும், ஆலய வழிபாடுகளின் அவசியத்தையும், மதங்கள் உணர்த்தும் மனிதநேயத்தையும் கற்றுத் தருவதோடு மாத, பிதா, குரு தெய்வம் என்ற மூத்தோர் சொல் கேட்டு நல்வழி நடக்க வேண்டும் என்ற தாரகை மந்திரத்தையும் குருகுல கல்வி மூலம் கற்றுத் தரப்படும்உலக அளவில் இந்தியா தேசத்திற்கு பெருமை சேர்ந்துகொண்டு இருப்பது தமிழ்நாட்டின் பண்டையகால வரலாற்று நிகழ்வுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்துக்கள் வழிபடும் சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாக இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு இந்தியாவில் மொத்தம் உள்ள 283 ஆலயங்களில் 276 ஆலயம் தமிழ் நாட்டில் உள்ளது.
108, வைனவ தேசதலங்களில் 96 தமிழகத்தில் உள்ளது.
21, முருகன் கோயிலில் 18 கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளது.
கணாபத்தியத்தில் கூறப்படும் அனைத்து வினாயகர் ஆலயமும் தமிழகத்தில் உள்ளது.
சூரியனை தெய்வமாக வழிபடும் மாநிலம் தமிழ்நாடு
பண்பாட்டையும் மரபு வழிபாட்டையு கடைபிடிக்கும் விதமாக அனைத்து பெண் தெய்வ வழிபாட்டு தலங்களும் தமிழ் நாட்டில் உள்ளது.
நவக்கிரக சன்னதி, 12, ராசி 27, நட்சத்திரங்களுக்கு வழிபாட்டு தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளது.
சப்தலிங்க தலங்கள் இருப்பதும் தமிழ் நாட்டில்
உலகநாடுகள் பேசப்படும் இந்து பண்பாட்டு வாழ்வியல் முறையின் தாய்வீடு தமிழகம் என்பதை தலைநிமிர்ந்து நெஞ்சுயர்த்தி வீரமுழக்கமிட்டு சொல்ல ஆதாரங்களை அடிக்கிகொண்டே போகலாம்எனவே குருகுல கல்வி முறையின் மூலம் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் பெருமைகளையும் கற்றுணர்ந்து நல்லவர்களாக வாழ்ந்து நல்ல தலைவர்களை தெரிந்தெடுத்து நல்லாட்சி அமைப்பது எளிமையான ஒன்று என உறுதி அளிக்கிறார் மனுநீதி மாணிக்கம்.