விவசாயிகளின் வருமானத்திற்கு வழி செய்கிறது சித்தகிரி இயற்கை வேளாண்மை கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனம்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சித்தகிரி இயற்கை வேளாண்மை கூட்டுப்பண்ணை கம்பெனி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது இதன்
மூலம் இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்து மண்ணையும் நீரையும் பாதுகாத்து அதிலிருந்து உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
அன்னவாசல் ஒன்றியம் வேளாண்மை துறை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் வணிகத்துறை வழிகாட்டுதல் மூலம் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடையூர் , மேலூர், புல்வயல் ,மாங்குடி, சித்தன்னவாசல் ஆகிய ஐந்து ஊராட்சிகளில் இருந்து 500 விவசாயிகளை கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
என்று இந்த அமைப்பின் தலைவர் பணிகொண்டாம்பட்டி செல்லப்பன் அவர்கள் கூறுகையில்
இந்த அமைப்பு கோவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மனுநீதி அறக்கட்டளையின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி இயற்கை வேளாண்மையை எங்கள் பகுதியில் நடைமுறைப்படுத்துவோம்
மேலும் எங்கள் அமைப்பில் இணையும் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதன் தலைவர் செல்லப்பன் இவ்வாறு தெரிவிக்கிறார்
தொழில்நுட்ப ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் .
தரமான விதை , இயற்கைஉரம், மூலிகை பூச்சிவிரட்டி மருந்து, வளர்ச்சி ஊக்கிகள், மகசூல் பெருக்கி மற்றும் இடுபொருட்கள் போன்றவற்றை கம்பெனியில் இருந்து நேரடியாகவும் கூட்டாகவும் கொள்முதல் செய்வதன் மூலம் லாபம் பெறுவது.
விளைந்த பொருள்களை கூட்டாகவும் நேரடியாகவும் விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர் பெறும் லாபத்தை உழவர்களே நேரடியாக பெறமுடியும்.
ஒவ்வொரு விவசாயிகளின் தேவைக்கு ஏற்றாபோல் அனைத்து உதவிகளையும் இந்த அமைப்பு மூலம் பெற முடியும்.
இந்த அமைப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் சாகுபடி திட்டம் வகுத்து அவருடைய உற்பத்திப் பொருள்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் லாபம் அடைய செய்யப்படும்.
விவசாயிகளுக்கு அரசாங்கத்தில் உள்ள அனைத்து மானியக் கடன்களையும் பெற்று தரப்படும்.
சாகுபடி செய்வதற்கு வங்கிக் கடன்கள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்த நிறுவனம் கொள்முதல் செய்து தாமத விற்பனை செய்யும் இதில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் லாபத்தை பகிர்ந்து வழங்கப்படும் மேலும் தேவைப்படும் மற்ற பொருட்கள் அனைத்தும் வேறு சங்கங்களில் இருந்து பெற்று தரப்படும் இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை இந்த நிறுவனத்தின் மூலம் பயன்பெறலாம் என்று அதன் தலைவர் செல்லப்பன் அவர்கள் கூறினார் இதில் உறுப்பினர் ஆவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9943457216