மனுநீதி மாணிக்கம் அவர்களின் நல்லாட்சி கொள்கையில் உடன்பாடு. கமல்ஹாசன்- மாணிக்கம் ஐயா அவர்களை சந்திப்பு

 மனுநீதி மாணிக்கம் அவர்களின் நல்லாட்சி கொள்கையில் உடன்பாடு.

கமல்ஹாசன்- மாணிக்கம் ஐயா அவர்களை சந்திப்பு




 ஏர்முனை முதல் ஏவுகணை வரை ஏராளமான சவால்கள் நிறைந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள்.


விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணைத்தொடும் அளவிற்கு சாதனை புரிந்தாலும் ,

மண்ணைத் தொடும் உழவனுக்கு உறுதுணையாக இருந்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்வதே  வாழ்நாள் சாதனையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் 

 நல்லாட்சி அமைய  அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களை  தேர்வு செய்ய வேண்டும். இதற்கான வேட்பாளரை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற பட்டியலை  அய்யா அவர்கள் வெளியிட்டார் இது சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் தீயாய் பரவியது இதை தொடர்ந்து


பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் , ஊடக நண்பர்கள் ,உழவர் பெருமக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் ஆலோசகர்கள் போன்றவர்கள் அய்யாவை தொடர்ந்து நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்துக் வருகின்றனர்.


இதை தொடர்ந்து 11/1/21 அன்று கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள் ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்களே சந்தித்தார் அப்பொழுது மனுநீதி அறக்கட்டளை மூலம் நல்லாட்சிக்கான வேட்பாளர் தகுதிப் பட்டியலை படித்தும் கேட்டும் திரு கமலஹாசன் அவர்கள் தெரிந்து கொண்டார்.


 தொடர்ந்து அய்யாவின் வேட்பாளர் தகுதி பட்டியல் நல்லாட்சிக்கு உகந்ததாகவும், சரியானதாகவும் இருக்கின்றது 

இதில் சில முரண்பாடுகள் இருந்தாலும் மாணிக்கம் ஐயாவின் விளக்கத்திற்கு பிறகு இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதை திரு கமலஹாசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.


ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்கள் கூறும்போது தமிழகத்தில் நல்ல அரசாட்சி கொடுக்கவும், நல்ல அரசவை அமையவும், லஞ்ச லாவண்யம் குறைந்து ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு யார் கொடுக்கிறார்களோ மேலும்  மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவர்கள் வீடு தேடி செல்வதற்கு எந்த  அரசியல் கட்சிகள் மூலம் சாத்தியப்படுகிறதோ அவர்களுடன் இணைந்து நல்லாட்சிக்கான சேவையில் எங்க அமைப்பை இணைத்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதை இந்த சந்திப்பில் மனுநீதி மாணிக்கம் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image