உழவர்களின் உரிமைக்கும் உயர்வுக்கும்
தனி ஆணையம் அமைத்தால் நல்லாட்சி உறுதி.
மத்திய மாநில அரசுகளுக்கு அய்யா மனுநீதி மாணிக்கம் அறிவுரை.
---
இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தின் அருமை மற்றும் அவசியத்தை உணர தொடங்கி விட்டோம் இருந்தாலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசுகளால் எடுக்கப்படும் முயற்சிகள் மிகக் குறைவு என்பதே யாரும் மறுக்க முடியாது உலக மக்களுக்கெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கின்ற விவசாயி தொடர்ந்து ஏழைகளாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்கள் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
மற்ற சமூகத்தினர் தான் சம்பாதித்த பணத்தை வங்கியில் போடுகிறார்கள் அவர் சமூகம் தான் சம்பாதித்த பணத்தை நமக்காக மீண்டும் வயலில் கொடுக்கிறார்கள் இவர்களுக்காக இவர்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்று ஐயா மாணிக்கம் அவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்
இதன் முடிவாக ஒரு ஏக்கரில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிகர லாபம் பெற்று விவசாயிகளை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்து அரசனுக்கு உணவளிப்பவன் என்று பெருமிதத்தோடு விவசாயிகளை வாழ வைக்க ஒரே தீர்வு இந்திய வேளாண்மை சீர்திருத்த ஆணையம் indian agricultural reform authority (IARA) அமைக்க வேண்டும் என்று அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுக்கின்றார்நோக்கம்.
----------------
1. உற்பத்தித் திறன் (productivity) மற்றும் உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்தல்.
2. பண்ணை கொள்முதல் விலையை உறுதி செய்தல் (farmgate price)
3. உள்ளூர்விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கான கொள்கையை முடிவு செய்தல்.
4. விவசாயத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு குடையின் கீழ் உடனடி தீர்வு காணுதல்.
5. உழவர்கள் மற்றும் உழவுத் தொழிலை நம்பி உள்ள 70% மக்களின் நலன் மற்றும் வருமானத்தை அதிகப்படுத்துதல்
6. நேரடி விற்பனை, (producer to consumers) மற்றும் தாமதவிற்பனை (Delayed marketing) முறை படுத்தி லாபமடைய செய்தல்.7. பயிர் தேர்வு (crop selection), தேவைக்கேற்ற சாகுபடி முறையை (need base cultivation) நடைமுறை படுத்தி நஷ்டத்தை தவிர்த்தல்.
8. விளை பொருட்களுக்கு மறுபதிப்பு கூட்டுவதன் மூலம் வேளாண்மை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல்
9. உழவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உடனுக்குடன் வங்கி கடன் கிடைக்கச் செய்தல்