வண்டுவாஞ்சேரி வருவாய் கிராமம் ஊராட்சி சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வண்டுவாஞ்சேரி வருவாய் கிராமம் ஊராட்சி சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் வெள்ளி கிடங்கு நால்ரோடு வடக்கு அய்யனார் கோவில் செல்லும் இணைப்பு சாலை சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை இல்லாமல் ஊர் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் இந்த வண்டுவாஞ்சேரி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் தற்போது அந்த வழியாக அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று தான் வருகிறார்கள் ஆனால் எந்த சலுகைகளும் ஊர் மக்களுக்கு செய்து தரவில்லை என ஊர் மக்கள் கூறுகின்றனர் அந்த ஊரில் வசிக்கும் முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிறு குழந்தைகள் இந்தச் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர் மழைக்காலங்களில் அந்த வழியாக ஆட்டோக்கள் சைக்கிளில் வருவதற்கே சிரமப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் டிஜிட்டல் இந்தியா என்று பேசக்கூடிய தமிழ்நாட்டில் இன்னும் தார் சாலைகளை கூட கண்டதில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர் அமைச்சர் சொந்த ஊரான இந்த ஊரிலேயே எவ்வளவு குறை உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என ஊர் மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்