திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காவலர்களுக்கு அதிமுக வினர் மலர்மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர்.
திண்டிவனம் மே.3
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தில் கொரானா வைரஸ் தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களின் ஆணைகினங்க அதிமுக ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா நிவாரணப் பொருட்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கனகேஷ்வரி, திண்டிவனம் காவல் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் ஒலக்கூர் காவலர்கள் கலந்து கொண்டனர்.
ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்