திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவர்களை அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார் May 20, 2020 • M.SENTHIL திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவர்களை அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார் கலசபாக்கம் மே 21, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம், புதுப்பாளையம், போளூர், ஜமுனாமரத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில், கொரானாவால் ஊரடங்கு உத்தரவு பிரபிக்கப்பட்டு வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் , முகக் கவசங்கள், சனிடைசர், போன்றவைகளை தன்னுடைய சொந்த செலவில் வழங்கிக் கொண்டுள்ளார். மேலும் கலசபாக்கம் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்ட தகவலறிந்து, 100 க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள், முகக் கவசங்கள், சனிடைசர் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். மேலும் கலசப்பாக்கம் பகுதியில் விவசாய நடவு மற்றும் நாற்றெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கொரொனா விழிப்புணர்வு இல்லாமல் வேலை செய்திருந்த விவசாயிகளுக்கு முகக் கவசங்கள் அணிவதன் முக்கியத்துவத்தை கூறி அவர்களுக்கு தன் கையாலேயே முகக் கவசங்களை அணிவித்து கடும் வெயிலிலும் நீங்கள் சேற்றில் இறங்கி விவசாய வேலை செய்வதை பாராட்டி நெஞ்சம் நெகிழ்ந்தார். கலசபாக்கம் செய்தியாளர் கிருபாகரன்