காங்கிரஸ் எம்பிக்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்.
திண்டிவனம் மே 9
திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சிதம்பரம் மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோர் இணைந்து 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் தனுசு, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் வெங்கட், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன் ராஜா, வழக்கறிஞர் விஜயன், வழக்கறிஞர் அஜிஸ், நிர்வாகிகள் ஆனந்தம், ஜெய்கணேஷ்,சவுக்கத் அலி,அருமை செல்வம் மற்றும் புவனேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்
ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்