திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படவுள்ள தளர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சிறப்பு கணிப்பாய்வு அதிகாரி சண்முகம் தலைமையில் நடைபெற்றது .
தமிழகத்தில் நேற்று முதல் 34 வகையிலான வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இவ்வறிவிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பு கணிப்பாய்வு அதிகாரி சண்முகம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
திறக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்,கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சுகாதார இணை இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.பாலா