ஊரடங்கால் உணவின்றி தவித்த வர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்த இருபத்தோரு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி பிறகு அதனை மே 14-ம் தேதி வரைக்கும் நீடிக்கும் உத்தரவிட்டுள்ளார் இதனால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உணவின்றி தவித்து வருகின்றனர் இதனை அறிந்த
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப் புதூரில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நாலாவது பட்டாலியன் சார்பில் அமராவதிப் புதூரில் உள்ள 200 கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி மளிகைப் பொருள்கள் சோப்பு என ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை வீரர்கள் வழங்கினார்கள் மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை நாலாவது பட்டாலியன் உள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை காரோனா மருத்துவமனையாக மாற்ற அனுமதித்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் கமாண்டன்ட் கிளாரி இன்ஸ்பெக்டர்கள் பிரின்ஸ், ரவிச்சந்திரன், முகேஷ் குமார் உதவி ஆய்வாளர்கள் குழந்தைவேலு தனபால் காளிதாசன் பாண்டி நேரடியாக கூலி தொழிலாளர்களுக்கு பொருட்களை வழங்கினார்கள்