அரசு அறிவித்த பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி தாலுகா பத்திரிகையாளர்களுக்கும்  வழங்க வேண்டும் என  நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை

அரசு அறிவித்த பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி தாலுகா பத்திரிகையாளர்களுக்கும்  வழங்க வேண்டும் என  நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை


கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் கோவி கல்வி ராயர்,செயலாளர்கள் க.திருநாவுக்கரசு, தி.அருள்செல்வம்,பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் கூட்டாக   தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை வைத்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் சூழலில் செய்திகள் மூலம் விழிப்புணர்வு மற்றும் தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியினை செய்து வரும் மாவட்ட, தாலுக்கா மற்றும் நகர செய்தியாளர்கள்    மற்றும் பத்திரிக்கை துறையில் பணியாற்றும் பணியாளர்கள்     அவர்களது குடும்பங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள்களின் அவர்களது குடும்பங்கள் உட்பட கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகும் சூழல் கொண்டோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், அவ்வப்போதான சோதனை  மற்றும் தமிழக அரசு அறிவித்த *கொரோனா சிறப்பு திட்ட   நிதியை உடனடியாக விடுவித்து* பத்திரிகை துறை நண்பர்களை பாராட்டி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பத்திரிக்கை துறை,ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் செய்திகளை சேகரிப்பு மற்றும் முழு நேரமாக மக்களுக்கும் அரசுகும் தொடர்பு பாலமாக செயலாற்றும் தாலுக்கா,நகர, பத்திரிக்கையாளர்களுக்கு  கொரோனா வைரஸால்  பாதிக்கப்படும் சூழல் உள்ள பிரிவினருக்கு உரிய சுகாதாரப் பாதுகாப்புடன் முகவசம்,சானிடைடர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை  வழங்க வேண்டுகிறோம்.
தமிழக அரசு கொரோனா பணியில் உள்ள மாவட்ட செய்தியாளர்கள்,ஊடகவியலாளருக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்குவதாக அறிகிறோம் . *இந் நிலையில் தாலுக்கா,நகர, பகுதியில் செய்தியாளர் கள் ஊடகவியலாளர்கள் பகுதிநேரமாக வும்,முழு நேரமாக களப்பணியில் அர்ப்பணிக்கட்டு செயலாற்றி வருகின்றனர். எனவே அனைத்து செய்தியாளர்களுக்கும் அரசின் கொரோனா சிறப்பு நிதிதிட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை வழங்க உரிய நடவடிக்கை மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நிதியை பெற அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.*
 நோய் தொற்று பேரிடர் முதல் இயற்கை சீற்றம்,வரை களத்தில் இருந்து தகவல்களை மக்களுக்கு அளித்து வரும் பத்திரிக்கை துறையில் செய்தியாளர் கள் மற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


*என்றும் சமுக நலனில்.*


கோவி.கல்விராயர்- பெருந்தலைவர்
க.திருநாவுக்கரசு,
தி.அருட்செல்வம்
செயலாளர்கள்.
இருதய ராஜ்.பொருளாளர்.
கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image