திருத்துறைப்பூண்டி
சுகாதார ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடிய பாமக பிரமுகருக்கு வலைவீச்சு
திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெங்கடாசலம் வயது 50. இவர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் வசித்து வருகிறார் நேற்று மதியம் 2 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு சென்றபோது வீட்டருகே ராமர் மடத் தெரு சேர்ந்த பாமக நகர செயலாளர் கவிப்ரியன் என்பவர் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய பேருந்து நிலையம் பகுதியில் மீன் விற்பனை செய்து வரும் கவி பிரியன் சில தினங்களுக்கு முன் மார்க்கெட் இடமாற்றத்திற்கு சுகாதார ஆய்வாளர் தான் காரணம் என்று நினைத்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்கள் யாரும் வேலை செய்யாமல் புறக்கணித்துள்ளனர். தற்போது நடைபெறும் 144 தடை உத்தரவு நேரத்தில். துறை பணியாளர்கள் மருத்துவ அதிகாரிகள் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து புகாரின் பெயரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து பாமக பிரமுகர் கவி பிரியனே தேடி வருகிறார்கள் ..காலையில் இருந்து திருத்துறைப்பூண்டி நகராட்சி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ... இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய பாமக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் க.பாலா