இளைஞர் பாசறை சார்பில் திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரியை அடுத்த தென்னங்குடி கிராம மக்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கினர்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுமே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு உதவும் வகையில் அம்பேத்கர் இளைஞர் பாசறை சார்பில் திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரியை அடுத்த தென்னங்குடி கிராம மக்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கினர். முன்னதாக கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எப்போதும் முகம் கவசம் அணிய வேண்டும் வெளியில் சென்று வந்த பிறகு கை கால் முகத்தை சோப்பினால் கழுவ வேண்டும் என்று வைப்புர் காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி அவர்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.
திருவாரூர் பாலகுரு