முடி திருத்தம் செய்பவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முடிதிருத்தம் செய்பவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனையின்பேரில் நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 15 நாட்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பினை மாவட்ட பால்வளத் துறை தலைவரும் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பச்சமுத்து வழங்கினார் முன்னதாக தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர் இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேப்பூர் ஊராட்சிமன்ற தலைவர் உடனிருந்தனர்