பள்ளி மாணவி எரித்து கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் 

பள்ளி மாணவி எரித்து கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் 


இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுர் அருகே உள்ள சிறு மதுரை கி.ராமத்தை சேர்ந்த ஜெயபால் இவரது மகள் ஜெயஸ்ரீ வயது 15 பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ள இன் நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொழுத்திய மனித மிருகங்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது  .


மேலும் விட்டிலிருந்து புகை வந்துள்ளதை பார்த்து பதறி போன அக்கம் பக்கத்தினர்கள் உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்த உள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . 



அரசு மருத்துவ மனையிலிருந்து ஜெயஸ்ரீ மரண வாக்கு மூலம் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஜெயஸ்ரீயை படு கொலை செய்த இரண்டு நபரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து உள்ளனர் . 


ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் .


உயிரிந்துள்ள ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை ரூ 5 லட்சம் வழங்க படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் கூடுதலாக ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


எனவே  : கொடூரமான முறையில் படு கொலை செய்த குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image