திட்டக்குடி நகரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழிதேவன் ஆலோசனையின் பெயரில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் விழிப்புணர்வு செய்தல் முக கவசம் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்ட பணிகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திட்டக்குடி நகரில் முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர அதிமுக செயலாளருமான அரங்க நீதிமன்னன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் பணியை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் துவக்கி வைத்தார் இதில் கம்மாபுரம் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந் தலைவருமான மருதை. முனுசாமி மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்