கடலூர் மாவட்டத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு தடுப்பு அரண்களை
மாவட்டஆட்சித்தலைவர்அன்புச்செல்வன் அவர்கள் ஆய்வு
கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை நத்தம் வீரபெருமனல்லூர் மங்கலம்பேட்டை
ஆகிய சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்
அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்புச்செல்வன்
(02,05,2020) நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்புச்செல்வன் தெரிவித்ததாவது
கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள
அனைத்து பகுதிகளையும் காவல்துறை தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு
கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்றுபிற மாவட்டங்கள்
மாநிலங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் அனைவரையும்
பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு
பகுதியாக இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பணிபுரிந்து வந்தவர் கள்
அவருடன் தொடர்பு உடையவர்கள் சுமார் 600 நபர்களுக்கு மேல் கண்டறியப்பட்டு
மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் அவர்களை தங்க வைத்தும் , மேலும் நெல்
அறுவடை இயந்திரங்களை இயக்கும் பிற மாநிலங்களுக்கு சென்று 100 கும் மேற்பட்ட
நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள
பஞ்சாயத்து அமைப்பு தலைவர்களும் வருவாய் துறை அலுவலர்களும் புதிதாக
கிராமப்புறங்களுக்கு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை
உடனடியாக மாவட்டத்தில் உள்ள 10 77 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு
தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
அதனைத்தொடர்ந்து வேப்பூர் தனியார் பள்ளியில் சென்னையிலிருந்து வந்த நபர்கள்
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளதையும், விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்
விடுதியில் சென்னையிலிருந்து வருகை புரிந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதையும்
மாவட்ட ஆட்சித் தலைவர் திருவெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது விருதாச்சலம் சார் ஆட்சியர் திரு.பிரவீன் குமார் இஆப,
கடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர்கள் திரு.உதயகுமார்
பண்ருட்டி, திரு.கவியரசு விருத்தாசலம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.