அறுவடைக்கு தயாரக இருந்த பயிர்கள் சேதம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பாசன விவசாயிகள் அராஜகம்..

அறுவடைக்கு தயாரக இருந்த பயிர்கள் சேதம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பாசன விவசாயிகள் அராஜகம்..


செங்கம்,மே16-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி ராமகிருஷ்ணன் வயது 65 என்பவருக்கு சொந்தமான விளை நிலைத்திருக்கு அருகிலிருக்கும் சுமார் 2 ஏக்கர் கொண்ட நீர் நிலை புறம்போக்கு இடத்தை முறைப்படுத்தி வேளான் நிலமாக்கி அதில் சுமார் 15 லட்சத்தில் கிணறு வெட்டி டீசல் இன்ஜின் மூலம் மேற்படி இந்த நிலத்தில் கடந்த கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் பல்வேறு வகையான வேளான் விளை பொருட்களை பயிர் செய்து வருகிறார். மேற்படி இந்த நிலத்திலேயே வீடுகட்டி அதற்கும் மின் இணைப்பும் பெற்றுள்ளார். மேலும் இவ்விடத்தில் புளி, மா, தென்னை, நெல்லி போன்ற பல்வேறு வகையான மரங்களை நட்டுவைத்துள்ளார். இம்மரங்களுக்கும் 40 வயதிற்கும் மேலாகிறது. 


தற்போது மேற்படி நிலத்தில் நெற்பயிர், பருத்தி, கேழ்வரகு போன்ற பயிர்கள் அறுவடைக்கு தயாரக உள்ளது. இந்நிலையில் மேற்படி சுப்பிரமணியின் வளர்ச்சி பொறுத்துக்கொள்ள முடியாத, பக்கிரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இவருடன் ஏரி பாசன விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அரசின் எவ்வித அனுமதியுமின்றி அராஜகமான முறையில் 6க்கும் மேற்பட்ட ஜே.சி.பி பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அத்துமீறி நிலத்தில் அறுவடைக்கு தயராக இருந்த பயிர்களை பிடுங்கிபோட்டு முழு பயிரையும் சேதப்படுப்படுத்தி நாசம் செய்தனர். மேற்படி நபர்களின் இந்த வெறியாட்டத்தால் நீர் நிலை அருகிலிருந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 


எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இச்சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்தும், பயிர்களை சேதப்படுத்திய ஜே.சி.பி இயந்திரங்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிவழங்க வேண்டும் என விவசாயிகள் துயரத்துடன் கோரிக்கை வைக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் சி.அரிகிருஷ்ணன்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image